கோவையில் மீண்டும் அண்ணாமலை போட்டி? கருணைக் கொலை செய்யப்பட்ட ஹரீஷ் ராணாவின் கருவிழிகள் தானம்!அதிமுக வேட்பாளர் பட்டியல் வெளியீடு!இன்று பிரசாரத்தை தொடங்குகிறாா் எடப்பாடி பழனிசாமி நெருங்கும் காலக்கெடு- ஒடிஸா, சத்தீஸ்கரில் மாவோயிஸ்ட் முக்கிய தலைவா்கள் சரண்ரயில்வேயில் புதிய சீா்திருத்தம்: பயணச்சீட்டு ரத்து கட்டணம் திரும்ப கிடைக்க ஏப்ரல் முதல் புதிய நடைமுறை மூன்றாம் பாலினத்தவா் சட்டத் திருத்த மசோதா: மக்களவையில் நிறைவேற்றம்
/

மலேசியாவில் பிப்.26 முதல் கரோனா தடுப்பூசி செலுத்தும் பணி தொடக்கம்

மலேசியாவில் பிப்ரவரி 26 முதல் கரோனா தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கப்பட உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

News image

மலேசியாவில் பிப்.26 முதல் கரோனா தடுப்பூசி செலுத்தும் பணி தொடக்கம்

Updated On :16 பிப்ரவரி 2021, 10:14 am

DIN

மலேசியாவில் பிப்ரவரி 26 முதல் கரோனா தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கப்பட உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

கரோனா தொற்று பாதிப்பு காரணமாக உலகின் பல்வேறு நாடுகளும் பாதிப்படைந்துள்ளன. தொற்று பரவலைக் கட்டுப்படுத்த மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளுக்கு மத்தியில் தடுப்பூசி தயாரிக்கும் பணியும் தீவிரமடைந்துள்ளது. 

இந்நிலையில் ஃபைசர் நிறுவனத்துடன் மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தின்படி  1 கோடியே 22 லட்சம் கரோனா தடுப்பூசிகளை மலேசியா பெற உள்ளது. அதனைத் தொடர்ந்து பிப்ரவரி 26ஆம் தேதி நாடு முழுவதும் கரோனா தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கும் என அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.

முதல் தடுப்பூசியை மலேசிய பிரதமர் முகைதீன் யாசின் செலுத்திக் கொள்வார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மலேசியாவில் தற்போது 2 லட்சத்து 66 ஆயிரம் பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.