பாகிஸ்தானில் மார்ச் 1 முதல் பள்ளிகள் மீண்டும் திறப்பு

பாகிஸ்தானில் கரோனா தொற்று பரவல் காரணமாக பள்ளிகள் மூடப்பட்டிருந்த நிலையில் மார்ச் 1ஆம் தேதி முதல் வழக்கமான வகுப்புகள் தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலகம் முழுவதும் கரோனா தொற்று பரவலைக் கட்டுப்படுத்தும் விதமாக பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் உள்ளிட்ட கல்வி நிலையங்கள் தற்காலிகமாக மூடப்பட்டன. 

தற்போது தொற்று பாதிப்பு நிலைகளுக்கேற்ப பள்ளிகள் திறக்கப்படுவதற்கான அறிவிப்பை பல்வேறு நாடுகளும் அறிவித்து வருகின்றன. 

இந்நிலையில் பாகிஸ்தானில் கரோனா தொற்று பரவல் முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கையாக மூடப்பட்டிருந்த பள்ளிகள் மார்ச் 1ஆம் தேதி முதல் மீண்டும் திறக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

கரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைப் பின்பற்றி பள்ளிகள் மீண்டும் திறக்கப்படுவதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com