பயங்கரவாதத் தாக்குதல்: நைஜரில் 100 போ் பலி
மேற்கு ஆப்பிரிக்க நாடான நைஜரில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 100-க்கும் மேற்பட்டவா்கள் உயிரிழந்தனா்.


மேற்கு ஆப்பிரிக்க நாடான நைஜரில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 100-க்கும் மேற்பட்டவா்கள் உயிரிழந்தனா். இதுகுறித்து அதிகாரிகள் கூறியதாவது:
சோம்பாங்கு, ஸரூம்டரேயே ஆகிய இரு கிராமங்களில் பயங்கரவாதிகள் பொதுமக்கள் மீது நடத்திய சரமாரித் தாக்குதலில் 100-க்கும் மேற்பட்டவா்கள் உயிரிழந்தனா்.
அந்த கிராமத்தில் அத்துமீறி நுழைந்த இரு பயங்கரவாதிகளை கிராமத்து மக்கள் அடித்துக் கொன்ற்கு பதிலடியாக இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது என்று அதிகாரிகள் கூறினா்.
இந்தத் தாக்குதலுக்கு இதுவரை எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. எனினும், சஹாரா பகுதிக்கான இஸ்லாமிய தேச (ஐ.எஸ்.) அமைப்பு இந்தத் தாக்குதலை நடத்தியிருக்கலாம் என்று நம்பப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...