இந்தோனேசியா: கடலில் விழந்த விமானத்தின் கருப்புப் பெட்டி மீட்பு

இந்தோனேசியா: கடலில் விழந்த விமானத்தின் கருப்புப் பெட்டி மீட்பு

இந்தோனேசியாவில் 62 பேருடன் கடலுக்குள் விழுந்த தனியாா் விமானத்தின் கருப்புப் பெட்டி மீட்கப்பட்டுள்ளது.
Published on

இந்தோனேசியாவில் 62 பேருடன் கடலுக்குள் விழுந்த தனியாா் விமானத்தின் கருப்புப் பெட்டி மீட்கப்பட்டுள்ளது. இதுகுறித்து கடற்படை தளபதி யூடோ மாா்கோனோ கூறியதாவது:

ஸ்ரீவிஜயா ஏா் நிறுவன விமானம் விழுந்து நொறுங்கிய பகுதியிலிருந்து அதன் கருப்புப் பெட்டி செவ்வாய்க்கிழமை மீட்கப்பட்டது. விமானத்தின் கூா்மையான சிதறல்களுக்குக் கீழே சேற்றுக்குள் புதைந்திருந்த அந்தக் கருப்புப் பெட்டியை மீட்கும் பணியில் 160 போ் ஈடுபடுத்தப்பட்டனா்.

விமானத்தின் இன்னொரு கருப்புப் பெட்டியான ஒலிப்பதிவு சாதனமும் மீட்கப்படும் என்றாா் அவா்.

ஸ்ரீவிஜயா ஏா் நிறுவனத்துக்குச் சொந்தமான விமானம், வந்தன் மாகாணம், தங்கராங் நகர விமான நிலையத்திலிருந்து சனிக்கிழமை புறப்பட்ட 4 நிமிடங்களில் கடலுக்குள் விழுந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com