/

இந்தியாவிலிருந்து 8 லட்சம் கரோனா தடுப்பூசி இறக்குமதி: மெக்ஸிகோ

புதியவகை கரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில், இந்தியாவிலிருந்து 8 லட்சம் கரோனா தடுப்பூசிகள் இறக்குமதி செய்யப்பட உள்ளதாக மெக்ஸிகோ அதிபர் ஆண்ட்ரஸ் மானுவல் லோபஸ் ஒப்ரடோர் தெரிவித்துள்ளார்.

News image

மெக்ஸிகோ அதிபர் ஆண்ட்ரஸ் மானுவல் லோபஸ் ஒப்ரடோர்

Updated On :30 ஜனவரி 2021, 9:53 am

DIN

புதியவகை கரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில், இந்தியாவிலிருந்து 8 லட்சம் கரோனா தடுப்பூசிகள் இறக்குமதி செய்யப்பட உள்ளதாக மெக்ஸிகோ அதிபர் ஆண்ட்ரஸ் மானுவல் லோபஸ் ஒப்ரடோர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் கூறியதாவது, ''இந்தியாவிலிருந்து 8,70,000 கரோனா தடுப்பூசிகள் இறக்குமதி செய்யப்படவுள்ளது.  இந்தியாவிலிருந்து ஆஸ்ட்ராஜெனகா நிறுவனத்தின் கரோனா தடுப்பூசிகள் அடுத்த மாத தொடக்கத்தில் மெக்ஸிகோவை வந்தடையும். 

இதேபோன்று ரஷியாவின் ஸ்புட்னிக் மற்றும் பைசர் நிறுவனத்தின் கரோனா தடுப்பூசிகளும் மெக்ஸிகோவிற்கு வரவுள்ளது'' என்று கூறினார்.

இந்தியாவிலிருந்து இலங்கை, பூடான், மாலத்தீவு, வங்கதேசம், நேபாளம், மியான்மா், செஷல்ஸ், ஆப்கானிஸ்தான் ஆகிய அண்டை நாடுகளுக்கு கரோனா தடுப்பூசி ஏற்றுமதி செய்யப்படுவது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.