ஜப்பானில் இரு தினங்களுக்கு முன்பு ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கிய 20க்கும் மேற்பட்டோரை தேடும் பணி நடைபெற்று வருகிறது.
ஜப்பான் தலைநகர் டோக்கியோவின் தென்மேற்கே 90 கிமீ தொலைவில் உள்ள அடாமி நகரில் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக பெய்து வரும் கனமழையால் கடந்த இரு தினங்களுக்கு முன்பு நிலச்சரிவு ஏற்பட்டது.
கடலோரப்பகுதி என்பதால் நிலச்சரிவின் பாதிப்பு அதிகமாக இருந்துள்ளது. பல வீடுகள் மண்சரிவில் புதைந்துள்ளன.
இதில் இதுவரை 26 பேர் வரையில் மீட்கப்பட்டுள்ளனர். நான்கு பேரின் உடல் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளது. மேலும் 20க்கும் மேற்பட்டோர் காணாமல் போயுள்ளதாகத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன.
மீட்புப்பணிகளை துரிதமாக மேற்கொள்ள பிரதமர் யோஷிஹைட் சுகா சிறப்பு படை ஒன்றையும் அனுப்பியுள்ளார். காவல்துறை, தீயணைப்புத் துறையினர் மற்றும் ஜப்பானிய ராணுவத்தினரும் தேடுதல் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
மண் சரிவு ஒரு சுனாமி போல் இருந்ததாகவும் அது ஒரு பயங்கர இடி போன்ற சத்தத்தை ஏற்படுத்தியதாகவும் மண்சரிவில் சிக்கி பிழைத்தவர் கூறியுள்ளார்.
பாதிக்கப்பட்டவர்களுக்கு ஜப்பானிய பிரதமர் யோஷிஹைட் சுகா தனது இரங்கலைத் தெரிவித்ததோடு, மண்சரிவில் சிக்கியவர்களின் உயிரைக் காப்பாற்ற மீட்புப் பணியாளர்கள் தங்களால் முடிந்த அனைத்தையும் செய்து வருவதாகத் தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

விஜய்தான் தமிழ்நாட்டை ஆள்வார்; இலங்கை, நேபாளம் போல கருத்துக்கணிப்புகள் பொய்யாகும்! - செங்கோட்டையன்

ரயில்வே நிதிக்கழகத்தில் உதவி மேலாளர் வேலை: யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம் விண்ணப்பங்கள் வரவேற்பு!

பொதுத் துறை வங்கியில் பாதுகாப்பு மேலாளர் பணி: விண்ணப்பிப்பது எப்படி?

பவர்கிரிட் நிறுவனத்தில் ஏராளமான வேலைவாய்ப்புகள்: டிப்ளமோ முடித்தவர்களுக்கு வாய்ப்பு!
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

