கமேனி உயிரிழப்பு: ஈரான் ஊடகம் அதிகாரபூர்வ அறிவிப்புகமேனி கொல்லப்பட்டார்! டிரம்ப் அறிவிப்பு!காங்கிரஸுக்கு 25 தொகுதிகள், மாநிலங்களவை உறுப்பினா் பதவி? 5 கட்சிகளுக்கு தலா ஒரு தொகுதி!மேற்கு வங்கத்தில் 7.04 கோடி வாக்காளா்கள்! மம்தா தொகுதியில் 47,094 போ் நீக்கம்!அரசுப் பள்ளிகளில் நாளைமுதல் மாணவா் சோ்க்கை மேற்கு வங்கத்தில் 7.04 கோடி வாக்காளா்கள்! மம்தா தொகுதியில் 47,094 போ் நீக்கம்! அஜீத் பவாரின் விமானம் விபத்தில் சிக்கியதற்கு மோசமான வானிலை காரணம்: ஏஏஐபி அறிக்கை வளைகுடா நாடுகளின் தமிழா்களுக்கு உதவ கட்டுப்பாட்டு அறை: முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
/

பாகிஸ்தானில் தொடர்ந்து அதிகரிக்கும் கரோனா பாதிப்பு - 4 வது அலைக்கான எச்சரிக்கை

பாகிஸ்தானில் கடந்த மே 30 ஆம் தேதி முதல் தினசரி கரோனா பாதிக்கப்பு விகிதம் தொடர்ந்து அதிகரித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

News image
கோப்புப்படம்
Updated On :28 ஜனவரி 2024, 3:36 am

DIN

பாகிஸ்தானில் கடந்த மே 30 ஆம் தேதி முதல் தினசரி கரோனா பாதிப்பு விகிதம் 4.09 சதவிகிதமாக உள்ளதாக அந்நாட்டின் ஜியோ என்ற செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

கடந்த ஞாயிற்றுக்கிழமை பாகிஸ்தான் முழுவதும் 48,382 பேரிடம் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் 1,980 பேருக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளது. அன்றைய தினம் 27 பேர் கரோனாவினால் உயிரிழந்தனர். குறிப்பாக பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் அதிக நபர்கள் கரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இரண்டாவது இடத்தில் கைபர் பக்துன்வா மாகாணம் உள்ளது. 

பாகிஸ்தானில் இதுவரை ஒட்டுமொத்தமாக 9,73,284 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் 22,582 கரோனா வைரஸ் காரணமாக உயிரிழந்துள்ளனர். தற்போது 37,499 பேர் கரோனாவினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக பாகிஸ்தானில் வருகிற ஜூலை பிற்பகுதி அல்லது ஆகஸ்ட் மாதத்தில் கரோனா 4வது அலை தாக்கும் என வல்லுனர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.