இது குறித்து வெள்ளைமாளிகை தரப்பிலிருந்து அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனும் இராக் பிரதம மந்திரி முஸ்தபா அல் காதிமியும் இருநாடுகளுக்கு இடையேயான ஒத்துழைப்பைப் பற்றியும் கல்வி, மருத்துவம் , காலச்சாரம் , சுற்றுச்சூழல் மேம்பாடு போன்றவற்றில் அதிகம் கவனம் செலுத்த இருப்பதாகவும் அரசியல் மற்றும் பொருளாதார நிலைகளைக் பற்றியும் பேச இருக்கிறார்கள் என்பதை தெரிவித்திருக்கிறார்கள். மேலும் இராக் நாட்டில் நிலவி வரும் இஸ்லாமிய பயங்கரவாதக் குழுவின் அச்சுறுத்தல்களை இரு நாடும் இணைந்து முறியடிக்க இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.