அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்
/

பாகிஸ்தான் : பேருந்து விபத்தில் 29 பேர் பலி , 40 பேர் படுகாயம்

பயணிகள் பேருந்தும்   லாரியும்  மோதிக் கொண்டதில் சம்பவ இடத்திலேயே 29 பேர் உயிரிழந்தனர். மேலும்  படுகாயம்  அடைந்த 40 பேர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

News image
கோப்புப்படம்
Updated On :19 ஜூலை 2021, 9:21 am

DIN

பஞ்சாப் (பாகிஸ்தான்) : பயணிகள் பேருந்தும்   லாரியும்  மோதிக் கொண்டதில் சம்பவ இடத்திலேயே 29 பேர் உயிரிழந்தனர். மேலும்  படுகாயம்  அடைந்த 40 பேர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

சிந்து நெடுஞ்சாலையில் சயில்கோட்டிலிருந்து ரஜன்பூர் நோக்கிச்  சென்று கொண்டிருந்த பயணிகள்  பேருந்து காஸி கான் பகுதியில்  எதிர்பாராத  விதமாக லாரி ஒன்றின் மீது மோதி விபத்திற்குள்ளானது .  கட்டுப்பாட்டை இழந்த பேருந்தில் 70க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்ததாகத் தெரிகிறது .இதில்  சம்பவ இடத்திலேயே 29 பேர்  பலியானார்கள்  என்றும் 44 பேர் படுகாயத்துடன் காஸி கான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும் காவல் கண்காணிப்பாளர் இர்ஷாத் அஹமது தெரிவித்திருக்கிறார். 

மேலும்  மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட  40 பேர்களில் 4 பேர் மிக மோசமான நிலையில் இருப்பதாக மருத்துவமனை  நிர்வாகம் கூறியிருக்கிறது.

இச்சம்பவம் குறித்து பாகிஸ்தானின் உள்துறை அமைச்சர் ஷேக் ரஷீத்  தன்னுடைய இரங்கல் செய்தியைப்  பகிர்ந்ததோடு " வரவிருக்கும் ஈதுல் -ஆஷா பண்டிகையைக் கொண்டாட வீடு திரும்பிக்கொண்டிருத்தவர்களுக்கு ஏற்பட்ட சோகம் பேரழிவிற்கு நிகரானது. கடவுள் இறந்தவர்களுக்கு  சொர்க்கத்தில் உயர்ந்த இடத்தையும் , உறவுகளை இழந்த குடும்பத்தார்களுக்கு மன தைரியத்தையும் கொடுக்கட்டும் "  எனத் தெரிவித்திருக்கிறார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.