6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

பாகிஸ்தானில் படகு மூழ்கியதில் 4 பேர் பலி, 17 பேர் மாயம்

பாகிஸ்தானில் ரகாகன் அணையில் படகுகள் மூழ்கியதில் 4 பேர் பலியானார்கள்.  

News image
Updated On :22 ஜூலை 2021, 10:59 am

DIN

பாகிஸ்தானில் ரகாகன் அணையில் படகுகள் மூழ்கியதில் 4 பேர் பலியானார்கள். 

பாகிஸ்தானின் பாஜாயுர் மாவட்டத்தில் உள்ள ரகாகன் அணையில் நேற்று 18 பேருடன் சென்ற சுற்றுலாப் படகு ஒன்று திடீரென மூழ்கியது. தகவல் அறிந்த சம்பவ இடத்துக்கு விரைந்த மீட்புக்குழுவினர் மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர். 

ஆனால் எதிர்பாராத விதமாக மீட்புக்குழுவினர் சென்ற 2 படகுகளும் மூழ்கின. இதன் பின்னர் அங்கு விரைந்த மற்றொரு மீட்புக்குழுவினர் மீட்புப் பணியில் ஈடுபட்டனர். இந்த சம்பவத்தில் 4 பேர் பலியானார்கள். 17 பேர் மாயமானார்கள். 

காயமடைந்தவர்கள் உடனடியாக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். தொடர்ந்து மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. அதிகம் பேர் பயணித்தால் பாரம் தாங்காமல் சுற்றுலாப் படகு மூழ்கியதாக காவல்துறையினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.