தலிபான்களை பின்னுக்கு தள்ள மீண்டும் களமிறங்கிய அமெரிக்கா
சமீபத்தில், ஆப்கன் அரசு படைகளுக்கு ஆதரவாக தலிபான்கள் மீது விமான படை தாக்குதல் நடத்தியதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.

கோப்புப்படம்

கோப்புப்படம்
சமீபத்தில், ஆப்கன் அரசு படைகளுக்கு ஆதரவாக தலிபான்கள் மீது விமான படை தாக்குதல் நடத்தியதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.
ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்க படைகள் விலகிவரும் நிலையில், தலிபான்களின் ஆதிக்கம் தொடர்ந்து அதிகரித்துவந்தது. இந்நிலையில், ஆப்கன் அரசு படைகளுக்கு ஆதரவாக தலிபான்களை பின்னுக்கு தள்ள சமீபத்தில் விமான படை தாக்குதல் நடத்தியதாக அமெரிக்கா நேற்று (வியாழக்கிழமை) தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அமெரிக்க பாதுகாப்பு துறையின் செய்தி தொடர்பாளர் ஜான் கிர்பி கூறுகையில், "கடந்த சில நாள்களாக, ஆப்கன் தேசிய பாதுகாப்பு படைக்கு ஆதரவாக விமான படை மூலம் தாக்குதல் நடத்தினோம். ஆப்கன் படைகளுக்கு ஆதரவாக தொடர்ந்து விமான படை தாக்குதல் நடத்திவருகிறோம். அமெரிக்க ராணுவத்தின் மத்திய பிரிவு தளபதி கென்னத் மெக்கென்சி இதற்கான அனுமதியை வழங்கினார்" என்றார்.
விமான படை தாக்குதலின் மற்ற விவரங்களை பகிர்ந்து கொள்ள மறுத்த கிர்பி, ஆப்கன் படைகளுக்கும் ஆப்கன் அரசுக்கும் உதவுவதில் உறுதி பூண்டுள்ளோம் எனத் தெரிவித்தார்.
ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்க படைகள் ஆகஸ்ட் 31ஆம் தேதிக்குள் மொத்தமாக வெளியேறிவிடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தலிபான்களுடன் பேச்சுவார்த்தையில் ஏற்பட்ட உடன்படிக்கையின் ஓர் அங்கமாக, அமெரிக்க படைகள் விலகிவருகின்றன. இதனை பயன்படுத்தி கொண்டு, தலிபான்கள் ஆப்கானிஸ்தானின் முக்கிய மாகாணங்களை கைப்பற்றிவருகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது


வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...