அதிபரானதற்கு பிறகு முதல்முறையாக திபெத்திற்கு சென்ற ஷி ஜின்பிங்

சீனாவின் சர்ச்சைக்குரிய பகுதியாக இருந்துவரும் திபெத்திற்கு அந்நாட்டு அதிபர்  ஷி ஜின்பிங் சென்றுள்ளார்.
கோப்புப்படம்
கோப்புப்படம்

சீனாவின் சர்ச்சைக்குரிய பகுதியாக இருந்துவரும் திபெத்திற்கு அந்நாட்டு அதிபர்  ஷி ஜின்பிங் சென்றுள்ளார்.

நூற்றாண்டுகளாக சீனாவின் சர்ச்சைக்குரிய பகுதியாக திபெத் இருந்துவருகிறது. சுதந்திரமான நாடாகாவும் சீனாவின் ஆளுகையின் கீழ் வரும் பகுதியாகவும் இருந்து வருகிறது. கடந்த 1951ஆம் ஆண்டு, அமைதியான வழியில் சுதந்திரம் அடைந்துவிட்டதாக திபெத் அறிவித்தது. 

ஆனால், தங்களின் கட்டுப்பாட்டில் தான் திபெத் உள்ளது என சீனா தொடர்ந்து தெரிவித்துவருகிறது. சீனாவின் ஆளுகையில் வளர்ச்சி குன்றிய பகுதியாக இருந்ததாகவும் சுதந்திரத்திற்கு பிறகுதான் கல்வி உள்கட்டமைப்ப வசதிகள் கொண்டு வரப்பட்டதாகவும் திபெத் தெரிவித்துள்ளது.

மத ரீதியாக சீனா ஒடுக்கிவருவதாகவும் கலாசாரத்தை மெதுவாக அழித்துவருவதாகவும் சீனாவால் நாடு கடத்தப்பட்ட திபெத்தியர்கள் குற்றம்சாட்டுகின்றனர். இந்நிலையில், அதிபரானதற்கு பிறகு முதல்முறையாக ஷி ஜின்பிங் திபெத்திற்கு சென்றுள்ளார். 30 ஆண்டுகளில் முதல்முறையாக சீனா அதிபர் அங்கு செல்வது இதுவே முதல்முறையாகும்.

இதுகுறித்து சீனாவின் அதிகாரப்பூர்வ தொலைக்காட்சி வெளியிட்ட விடியோவில், பாரம்பரிய உடைகளை அணிந்த திபெத்தியர்கள் சீன கொடியுடன் ஜின்பிங்கை வரவேற்பதை காணலாம். விமான நிலையத்தில் சிகப்பு கம்பலத்துடன் அவர் வழி அனுப்பி வைக்கப்பட்டார்.

புதன்கிழமை அன்று ஜின்பிங் சென்றிருந்தாலும், இன்றுதான் இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவல் வெளியானது. முன்னதாக, புஜியன் மாகாணத்தின் தலைவராக இருந்தபோதும் சீனாவின் துணை அதிபராக இருந்தபோதும் அவர் திபெத்திற்கு சென்றிருந்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com