நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

உலகளவில் கரோனா பாதிப்பு 17.33 கோடி: பலி 37.27 லட்சமாக உயர்வு

உலகம் முழுவதும் கரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 17.33 கோடியைத் தாண்டியுள்ளது. பலி எண்ணிக்கை 37.27 லட்சமாக அதிகரித்துள்ளது. 

News image

உலகளவில் கரோனா பாதிப்பு 17.33 கோடி

Updated On :5 ஜூன் 2021, 3:23 am

DIN


வாஷிங்டன்: உலகம் முழுவதும் கரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 17.33 கோடியைத் தாண்டியுள்ளது. பலி எண்ணிக்கை 37.27 லட்சமாக அதிகரித்துள்ளது. 

உலகம் முழுவதும் கரோனா தொற்றின் இரண்டாவது அலை தற்போது பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்தியா, பிரேசில் உள்ளிட்ட நாடுகளில் கரோனா இரண்டாம் அலை கோர தாண்டவம் ஆடி வருகிறது. இதனால் உலகம் முழுவதும் தொற்று பாதிப்போர் மற்றும் பலி எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்த நிலையிலேயே உள்ளது.  உலகம் முழுவதும் இதுவரை கரோனா பாதித்தோர் எண்ணிக்கை 17,33,25,310-ஆக அதிகரித்துள்ளது. அவா்களில் 37,27,534 போ் அந்த நோய் பாதிப்பால் உயிரிழந்துள்ளனர். 

மேலும், 15,60,62,506 போ் பூரண குணமடைந்துள்ளனர். சுமாா் 1,35,35,270 போ் தொடா்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனா். அவர்களில் 88,160 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

உலகிலேயே மிகவும் மோசமான பாதிப்புக்குள்ளான நாடாக அமெரிக்‍கா உள்ளது. அங்கு இதுவரை தொற்று பாதிக்கப்பட்டோர் எண்ணிக்‍கை 3,41,92,023    கோடியைத் தாண்டியுள்ளது. பலி எண்ணிக்‍கை 612,240-ஆக உயர்ந்துள்ளது. 

நோய்த்தொற்று பாதிப்புகளைப் பொறுத்தவரை இரண்டாவது இடத்தில் உள்ள இந்தியாவில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்‍கை 2,86,93,835-ஆக உயர்ந்துள்ளது. இதுவரை கரோனாவால் 3,44,101 பேர் உயிரிழந்துள்ளனர். 

தொற்று பாதிப்பில் மூன்றாவது இடத்தில் உள்ள பிரேசிலில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்‍கை 1,68,41,954-ஆக உயர்ந்துள்ளது. தொற்று பாதிப்பால் உயிரிழப்புகளை பொறுத்தவரை, 4,70,968 பேர் உயிரிழப்புகளுடன் இரண்டாவது இடத்தில் உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.