ஆப்கனில் தலிபான்கள் தாக்குதல்: 23 பாதுகாப்புப்படையினர் பலி
ஆப்கனில் தலிபான்கள் நடத்திய தாக்குதலில் 23 பாதுகாப்புப்படையினர் பலியானார்கள்.


ஆப்கனில் தலிபான்கள் நடத்திய தாக்குதலில் 23 பாதுகாப்புப்படையினர் பலியானார்கள்.
ஆப்கனின் வடக்கு மாகாணமான ஃபர்யாபில் உள்ள அபாத் மாவட்டத்தில் பாதுகாப்புப்படையினருக்கும், தலிபான்களுக்கும் இடையே இன்று கடும் மோதல் நடைபெற்றது. இந்த மோதலில் 23 பாதுகாப்புப்படையினர் பலியானார்கள். 6 காவலர்கள் காயமடைந்தனர்.
ஆப்கனில் 19 ஆண்டுகளுக்கு மேலாக நீடிக்கும் உள்நாட்டு போரை முடிவுக்கு கொண்டு வருவதற்காக அந்த நாட்டு அரசுக்கும் தலீபான் பயங்கரவாத அமைப்புக்கும் இடையே பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.
ஆனால் அமைதி பேச்சுவார்த்தை ஒருபுறம் நடந்து வந்தாலும் ஆப்கனில் பயங்கரவாத தாக்குதல்கள் ஓய்ந்தபாடில்லை. பாதுகாப்பு வீரர்களையும் காவலர்களையும் குறிவைத்து தலீபான் பயங்கரவாதிகள் தொடர் தாக்குதல்களை நடத்தி வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...