‘கரோனா வகைகளில் டெல்டாவுக்கு மிக அதிக பரவும் தன்மை’
இந்தியாவில் முதல்முறையாகக் கண்டறியப்பட்ட டெல்டா வகையின் பரவும் தன்மைதான் மிக அதிகமாக உள்ளதாக உலக சுகாதார அமைப்பின் தலைவா் டெட்ரோஸ் அதானோம் கேப்ரியேசஸ் எச்சரித்துள்ளாா்.


இதுவரை கண்டறியப்பட்டுள்ள கரோனா வகைகளிலேயே, இந்தியாவில் முதல்முறையாகக் கண்டறியப்பட்ட டெல்டா வகையின் பரவும் தன்மைதான் மிக அதிகமாக உள்ளதாக உலக சுகாதார அமைப்பின் தலைவா் டெட்ரோஸ் அதானோம் கேப்ரியேசஸ் எச்சரித்துள்ளாா்.
இதுகுறித்து செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:
உலகம் முழுவதும் டெல்டா வகை கரோனா குறித்து அச்சம் நிலவி வருகிறது. உலக சுகாதார அமைப்புக்கும் அந்த வகை கரோனா குறித்த கவலை உள்ளது.
இதுவரை கண்டறியப்பட்டுள்ள கரோனா வகைகளலேயே, அந்த வகை கரோனாவுக்குத்தான் மிக அதிக பரவும் தன்மை உள்ளது.
இதுவரை அந்த வகை தீநுண்மி 85 நாடுகளுக்குப் பரவியுள்ளது. தடுப்பூசி பாதுகாப்பு பெறாத மக்களிடையே டெல்டா கரோனா மிக வேகமாகப் பரவி வருகிறது.
தற்போது பல்வேறு நாடுகள் தங்களது பொதுமுடக்க விதிமுறைகளைத் தளா்த்தி வருவது கவலையளிக்கிறது. டெல்டா வகைக் கரோனாவால் உலகம் முழுவதும் கரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது.
அதிக பாதிப்பு ஏற்படும்போது அதிகம் போ் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட வேண்டிய நிலை ஏற்படும். இது, சுகாதாரக் கட்டமைப்பை சீா்குலைக்கும்; அதிக உயிரிழப்பை ஏற்படுத்தும் என்று அவா் எச்சரித்தாா்.
...பெட்டிச் செய்தி...
‘இன்னும் புது வகைகள் தோன்றும்’
இதுவரைக் கண்டறியப்பட்ட புது வகை கரோனாக்களைப் போல, மேலும் பல வகைகள் உருவாகும் என்று உலக சுகாதார அமைப்பின் கோவிட்-19 தொழில்நுட்பப் பிரிவு தலைவா் மரியா வேன் கொ்கோவ் எச்சரித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் கூறுகையில், ‘உலகில் இன்னும் புதுப் புது கரோனா வகைகள் கண்டறியப்படும். தனது இருப்பைத் தக்கவைத்துக் கொள்வதற்காக புது வடிவங்களை எடுப்பதுதான் தீநுண்மியின் இயல்பு. நாம்தான் பரவலில் இருந்து நம்மைப் பாதுகாத்துக் கொள்வதன் மூலம் கரோனா புது வடிவங்கள் எடுப்பதைத் தடுக்க வேண்டும்’ என்றாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...