தமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் கேரளத்துக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு அசாம்: ஏப்ரல் 9 பேரவைத் தேர்தல் 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 824 சட்டப்பேரவைத் தொகுதிகளில் தேர்தல் நடைபெறவுள்ளது 5 மாநில தேர்தல்களில் மொத்தம் 17.4 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

பாகிஸ்தானில் ஹிந்து மத பத்திரிகையாளர் கொலை

பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் ஹிந்து மத பத்திரிகையாளர் மீது மர்ம நபர்கள் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் அவர் உயிரிழந்தார்

News image
கோப்புப்படம்
Updated On :20 மார்ச் 2021, 11:00 am

DIN

பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் ஹிந்து மத பத்திரிகையாளர் மீது மர்ம நபர்கள் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் அவர் உயிரிழந்தார்.

முடிதிருத்தும் கடையில் இருந்த 31 வயதான ஹிந்து பத்திரிகையாளர் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதைத் தொடர்ந்து, சிந்து மாகாணத்தில் பத்திரிகையாளர்கள்  பேரணியில் ஈடுபட்டனர்.

சிந்து மாகாணத்தை சேர்ந்த அஜய் லால்வானி என்பவர் அங்குள்ள தொலைக்காட்சியில் பத்திரிகையாளராக பணியாற்றி வந்தார்.

இந்நிலையில், சுக்குர் பகுதியில் உள்ள முடிதிருத்தும் கடையில் அவர் இருந்தபோது, இருசக்கர வாகனம் மற்றும் காரில் வந்த மர்ம நபர்கள் லால்வானி மீது துப்பாக்கியால் சரமாரியாக சுட்டனர்.

இதில் படுகாயமடைந்த அவர், மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டார். எனினும் அவர் வழியிலேயே உயிரிழந்தார்.

பாகிஸ்தானில் தொடர்ந்து ஹிந்து பத்திரிகையாளர்கள் கொல்லப்படுவதற்கு பாகிஸ்தான் அமைச்சரவையின் ஹிந்து உறுப்பினர் லால் சந்த் மாலி கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக சுட்டுரையில் பதிவிட்டுள்ள அவர், ''சிந்து மாகாணத்தில் ஹிந்து பத்திரிகையாளர்களுக்கு பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளது. தொடர்ந்து பத்திரிகையாளர்கள் கொல்லப்படுவது பாதுகாப்பின்மையை உணரச்செய்கிறது. உயிரிழந்த பத்திரிகையாளரின் குடும்பத்திற்கு இரங்கல்'' என்று பதிவிட்டுள்ளார்.

பத்திரிகையாளர் லால்வானி திட்டமிட்டு கொல்லப்பட்டுள்ளதாகவும், உரிய விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் பத்திரிகையாளர்கள் பேரணியில் ஈடுபட்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.