வங்கதேசம் ரோஹிங்கயா அகதிகள் முகாமில் தீ விபத்து: 15 பேர் பலி
வங்கதேசத்தில் உள்ள ரோஹிங்கயா அகதிகள் முகாமில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 15 பேர் பலியாகியுள்ளனர்.


வங்கதேசத்தில் உள்ள ரோஹிங்கயா அகதிகள் முகாமில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 15 பேர் பலியாகியுள்ளனர்.
வங்கதேசம் நாட்டின் காக்ஸ் பஜாரில் உள்ள ரோஹிங்கயா அகதிகள் முகாமில் திங்கள்கிழமை தீ விபத்து ஏற்பட்டது. சுமார் 8 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இந்த முகாமில் ஏற்பட்ட மூன்றாவது தீ விபத்து இதுவாகும்.
இந்த தீ விபத்தில் சிக்கி பலியானவர்களின் எண்ணிக்கை 15ஆக அதிகரித்துள்ளது. மேலும் இதுவரை 400க்கும் மேற்பட்டவர்கள் காணாமல் போயுள்ளதாகவும் அவர்களை தேடும் பணி தீவிரமடைந்து வருவதாகவும் அந்நாட்டின் பேரிடர் மீட்புத்துறை தெரிவித்துள்ளது.
இந்த தீ விபத்து குறித்து முறையாக விசாரணை நடைபெற்று வருவதாக வங்கதேச அரசு தெரிவித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...