அமெரிக்கப் பள்ளியில் மாணவி துப்பாக்கிச்சூடு: 3 பேர் காயம்

அமெரிக்காவில் 6-ஆம் வகுப்பு படிக்கும் பள்ளி மாணவி துப்பாக்கியால் திடீரென சுட்டதில் மூன்று பேர் காயமடைந்தனர். 
அமெரிக்கப் பள்ளியில் மாணவி துப்பாக்கிச்சூடு
அமெரிக்கப் பள்ளியில் மாணவி துப்பாக்கிச்சூடு
Updated on
1 min read

அமெரிக்காவில் 6-ஆம் வகுப்பு படிக்கும் பள்ளி மாணவி துப்பாக்கியால் திடீரென சுட்டதில் மூன்று பேர் காயமடைந்தனர். 

அமெரிக்காவின் இதாஹோ மாவட்டத்தில் உள்ள நடுநிலைப் பள்ளியில் படிக்கு  மாணவி கைத்துப்பாக்கி கொண்டு வந்த அங்குள்ள 2 மாணவர்கள் மற்றும் ஒரு பாதுகாவலரைச் சுட்டுள்ளார். துப்பாக்கியால் சுட்ட மூன்று பேரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

துப்பாக்கிச்சூடு சத்தம் கேட்டு பள்ளியிலிருந்த அனைவரும் அதிர்ச்சியில் உறைந்தனர். பின்னர், மாணவியிடம் இருந்த துப்பாக்கியை ஆசிரியர் ஒருவர் பறித்து வைத்துள்ளார். பின்னர், மாணவியை காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டது. 

மாணவி எதற்காகச் சுட்டார், துப்பாக்கி எங்கிருந்து கிடைத்தது என்பது குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com