சமீர் ரிஸ்வி அதிரடியில் தில்லி கேபிடல்ஸ் வெற்றி!பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! 2 மாதங்களுக்குத் தேவையான கச்சா எண்ணெய் கையிருப்பு!பாஜகவுடன் திமுக கூட்டணி வைத்தது; இபிஎஸ் போல அடகு வைக்கவில்லை - மு.க. ஸ்டாலின்3 மாதங்களில் போதைப்பொருள்களை ஒழிப்போம் : எடப்பாடி பழனிசாமிபெட்ரோல், டீசல், எல்பிஜி விலையேற்றம் இல்லை: மத்திய அரசுஷெல் நிறுவன பெட்ரோல் ரூ. 7, டீசல் ரூ. 25 அதிரடி விலையேற்றம்!
/

உலகளவில் கரோனா பாதிப்பு 16.55 கோடியைத் தாண்டியது

உலகம் முழுவதும் கரோனா நோய்த் தொற்றால் பாதித்தோர் எண்ணிக்கை 16.55 கோடியைத் தாண்டியது.

News image

உலகளவில் கரோனா பாதிப்பு 16.55 கோடியைத் தாண்டியது

Updated On :20 மே 2021, 5:31 am

DIN


உலகம் முழுவதும் கரோனா நோய்த் தொற்றால் பாதித்தோர் எண்ணிக்கை 16.55 கோடியைத் தாண்டியது.

உலகில் பெரும்பாலான நாடுகளில் கரோனா இரண்டாம் அலை பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. இந்தியா, பிரேசில் உள்ளிட்ட நாடுகளில் கரோனா இரண்டாம் அலை கோர தாண்டவம் ஆடி வருகிறது. இதனால் உலகளவிலும் கரோனா பாதிப்பு அதிகரித்துள்ளது.

கரோனாவுக்கு உலகம் முழுவதும் இதுவரை 16,55,69,532 பேருக்கு நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவா்களில் 34,31,794 போ் உயிரிழந்துள்ளனர்.
 
மேலும், 14,45,90,005 போ் பூரண குணமடைந்துள்ளனர். சுமார் 1,754,7,733 போ் தொடா்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனா். அவர்களில் 1,00,073 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

உலக நாடுகளில் அமெரிக்கா கரோனா பாதிப்பில் முதலிடத்திலும், அங்கு பாதித்தோர் எண்ணிக்கை 3,380,2,324 ஆகவும், 25,77,2,440 பேர் பாதித்து இந்தியா இரண்டாமிடத்திலும் உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.