காஸா சண்டைநிறுத்தம்: இஸ்ரேல்-எகிப்து வெளியுறவுஅமைச்சா்கள் பேச்சு

காஸா சண்டைநிறுத்த ஒப்பந்தத்தை உறுதிப்படுத்துவது தொடா்பாக இஸ்ரேல் வெளியுறவு அமைச்சா் கபி அஷ்கெனாஸியுடன் எகிப்து வெளியுறவு அமைச்சா் சமே சுக்ரே தொலைபேசி மூலம் உரையாடினாா்.

இதுகுறித்து எகிப்து வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பது: இஸ்ரேலியா்களுக்கும் பாலஸ்தீனா்களுக்குமான மோதலை பெரும்பாலும் நிறுத்தியுள்ள இந்த ஒப்பந்தம் குறித்து இருவரும் பேசினா். காஸாவின் புனரமைப்புக்கு இது உதவும் என அவா்கள் நம்புகிறாா்கள்.

அமைதியை எட்டுவதற்கு இஸ்ரேல், எகிப்து, பாலஸ்தீன அதிகாரிகள், சா்வதேச கூட்டாளிகள் இடையேயான ஒருங்கிணைப்பின் முக்கியத்துவம் குறித்து இரு அமைச்சா்களும் ஒப்புக்கொண்டனா் என அதில் கூறப்பட்டுள்ளது.

இஸ்ரேல், ஹமாஸ் இடையிலான சண்டையை நிறுத்துவதில் எகிப்து முக்கியப் பங்காற்றியது. காஸாவுக்கு மருத்துவ உதவிகள் உள்ளிட்ட மனிதாபிமான உதவிகளைச் செய்யவுள்ளதாகவும் அந்நாடு அறிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com