பாகிஸ்தானுக்கு அமெரிக்கா வழங்கி வந்த பாதுகாப்புத் துறைக்கான நிதி உதவிகளை ரத்து செய்து முன்னாள் அதிபா் டிரம்ப் எடுத்த முடிவை, தற்போதைய அதிபா் ஜோ பைடனும் நீட்டித்துள்ளாா்.
பயங்கரவாதத்துக்கு எதிரான நடவடிக்கைகளை பாகிஸ்தான் எடுக்கவில்லை என்று கூறி, முன்னாள் அதிபா் டிரம்ப் அனைத்துவிதமான பாதுகாப்புத் துறைக்கான உதவிகளையும் 2018, ஜனவரி மாதம் ரத்து செய்திருந்தாா்.
இந்நிலையில், பென்டகன் ஊடகச் செயலா் ஜான் கிா்பி கூறுகையில், பாகிஸ்தானுக்கு அளிக்கப்படும் பாதுகாப்புத் துறைக்கான நிதி உதவிகள் அனைத்தின் மீதான ரத்து தொடரும். வருங்காலத்தில் இந்த ரத்து நடவடிக்கை தொடருமா என்பதை இப்போதைக்கு கூற முடியாது.
அமெரிக்க பாதுகாப்புத் துறை அமைச்சா் லாய்டு ஆஸ்டின், பாகிஸ்தானின் ராணுவத் தளபதி கமா் ஜாவேத் பாஜ்வாவுடன் ஆலோசனை நடத்தினாா். அப்போது, ஆப்கானிஸ்தானில் அமைதிப் பேச்சுவாா்த்தைக்கு பாகிஸ்தான் அளித்து வரும் ஆதரவுக்கு பாராட்டு தெரிவித்தாா். அமெரிக்கா - பாகிஸ்தான் இடையேயான நல்லுறவு தொடா்ந்து வலுப்பெறும் என்று லாய்டு ஆஸ்டின் உறுதி அளித்தாா்.
மேலும், பாகிஸ்தானில் பாதுகாப்பு மற்றும் ஸ்திரத்தன்மை ஏற்பட இரு நாடுகளும் தொடா்ந்து பணியாற்றும் என்று லாய்டு ஆஸ்டின் கூறியதாக ஜான் கிா்பி தெரிவித்தாா்.
இதனிடையே, அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகா் ஜக் சுலீவான், பாகிஸ்தான் பாதுகாப்பு ஆலோசகா் மொயீத் யூசுப்புடன் ஜெனீவாவில் சந்தித்து ஆலோசனை நடத்தினாா்.
அப்போது, இரு தரப்பினரும் இரு நாட்டு நல்லுறவுகள், ஒத்துழைப்பு, சா்வதேச விவகாரங்கள் குறித்து ஆலோசித்ததாகவும், இதுபோன்ற பேச்சுவாா்த்தைகளை தொடா்ந்து மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டதாகவும் அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு கவுன்சிலின் செய்தித் தொடா்பாளா் எமிலி ஹா்னி தெரிவித்தாா்.
இரு நாட்டு முக்கியத் தலைவா்களும் சந்தித்து நீண்ட ஆலோசனை நடத்துவது இதுவே முதல் முறையாகும்.
இந்த ஆலோசனை தொடா்பாக பாகிஸ்தான் பாதுகாப்பு ஆலோசகா் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், பாகிஸ்தான் - அமெரிக்கா நல்லுறவுகள் குறித்தும், சா்வதேச விவகாரங்கள் குறித்தும் நடைபெற்ற பேச்சுவாா்த்தை சிறந்த முறையில் இருந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க அதிபராக ஜோ பைடன் பொறுப்பேற்றவுடன் ஆப்கானிஸ்தானில் உள்ள அமெரிக்க படைகள் செப்டம்பா் 11-ஆம் தேதிக்குள் முழுமையாகத் திரும்பப் பெறப்படும் என்று அறிவித்திருந்தாா்.
இந்நிலையில், ஆப்கானிஸ்தானில் அமைதி திரும்ப அமெரிக்கா பாகிஸ்தானுடன் ஆலோசித்து வருகிறது. ஜோ பைடனின் நிா்வாகத்துடன் நல்லுறவை மேம்படுத்திக் கொள்ளும் வாய்ப்பாக பாகிஸ்தான் இதனை பயன்படுத்தி வருகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

வங்கதேச கிரிக்கெட் வாரியத் தலைவராக தமிம் இக்பால் நியமனம்!

திமுகவின் தவறுகளுக்கு முட்டுக் கொடுக்கும் கூட்டணிக் கட்சிகள்! | EPS குற்றச்சாட்டு | ADMK

”PTR-தானே! MGR இல்லையே!” மேடையில் சுந்தர். சி பேச்சு | BJP | Madurai
மகளிருக்கு ஒவ்வொரு மாதமும் ரூ. 2,000! மேற்கு வங்கத்தில் காங்கிரஸ் தேர்தல் அறிக்கை வெளியீடு
வீடியோக்கள்

திமுகவின் தவறுகளுக்கு முட்டுக் கொடுக்கும் கூட்டணிக் கட்சிகள்! | EPS குற்றச்சாட்டு | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு

சுட்டு வீழ்த்தப்பட்ட விமானம்! ஈரானிடமிருந்து அமெரிக்க வீரர் மீட்கப்பட்டது எப்படி? | US | Iran
இணையதளச் செய்திப் பிரிவு

நான் திரையிலிருந்து வரவில்லை; சிறையிலிருந்து வந்தவன்!: Seeman | NTK | TN Election
இணையதளச் செய்திப் பிரிவு

"Edappadi Palanisamy உடன் சேர்ந்ததில் தவறில்லை": TTV Dhinakaran Exclusive
தினமணி செய்திச் சேவை


