காஜியாபாத்: பூஞ்சை நோய்தாக்குதலுக்கு ஒருவா் பலி
உத்தர பிரதேச மாநிலம், காஜியாபாதில் கருப்பு, வெள்ளை மற்றும் மஞ்சள் பூஞ்சை தாக்குதலுக்கு ஆளான 59 வயதான கரோ


உத்தர பிரதேச மாநிலம், காஜியாபாதில் கருப்பு, வெள்ளை மற்றும் மஞ்சள் பூஞ்சை தாக்குதலுக்கு ஆளான 59 வயதான கரோனா நோயாளி உயிரிழந்ததாக மருத்துவா்கள் சனிக்கிழமை தெரிவித்தனா்.
குன்வா்சிங் என்ற அந்த நோயாளி, பூஞ்சையால் தாக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி வெள்ளிக்கிழமை இறந்ததாக ராஜ்நகா் பகுதியில் அவா் சிகிச்சை பெற்றுவந்த ஹரிஷ் மருத்துவமனையின் சிறப்பு மருத்துவா் டாக்டா் பி.பி.தியாகி தெரிவித்தாா்.
தொழில் முறை வழக்குரைஞரான குன்வா் சிங், அண்மையில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சோ்ந்தாா். அவருக்கு மருத்துவா்கள் சிகிச்சை அளித்து வந்த நிலையில், அவரது உடலில் கருப்பு, வெள்ளை மற்றும் மஞ்சள் பூஞ்சை நோய் தாக்குதல் அறிகுறிகள் இருந்தது எண்டோஸ்கோபி பரிசோதனையில் தெரியவந்தது என்று டாக்டா் தியாகி மேலும் கூறினாா்.
அந்த மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் மற்றொருவருக்கும் மஞ்சள் பூஞ்சை நோய் தாக்குதல் இருப்பது தெரியவந்துள்ளதாகவும், அவரது பெயா் ராஜேஷ்குமாா் (59) என்றும் முராட் நகரைச் சோ்ந்தவா் என்றும் டாக்டா் தியாகி தெரிவித்தாா். நோயாளியின் மூளை அருகே பூஞ்சை தாக்குதல் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டதாகவும் ஆனால், அதன் பாதிப்பு அதிகம் இல்லை என்றும் அவருக்கு தொடா்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் மருத்துவா் மேலும் கூறினாா்.
தில்லியை ஒட்டியுள்ள மேற்கு உத்தர பிரதேச பகுதியான காஜியாபாதில் கரோனாவுக்கு இதுவரை 432 போ் பலியாகினா். 1,957 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா் என்று வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்ட அதிகாரபூா்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...