இந்திய விமானங்களுக்கு ஜூன் 30 வரை தடை நீட்டித்தது ஐக்கிய அரபு அமீரகம்

கரோனா தொற்று பரவல் காரணமாக இந்தியாவிலிருந்து துபைக்கு வரும் பயணிகள் விமானங்களுக்கு ஜூன் 30 வரை தடை நீட்டித்து ஐக்கிய அரபு அமீரகம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
இந்திய விமானங்களுக்கு ஜூன் 30 வரை தடை நீட்டித்தது ஐக்கிய அரபு அமீரகம்
இந்திய விமானங்களுக்கு ஜூன் 30 வரை தடை நீட்டித்தது ஐக்கிய அரபு அமீரகம்
Updated on
1 min read

கரோனா தொற்று பரவல் காரணமாக இந்தியாவிலிருந்து துபைக்கு வரும் பயணிகள் விமானங்களுக்கு ஜூன் 30 வரை தடை நீட்டித்து ஐக்கிய அரபு அமீரகம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

நாடு முழுவதும் கரோனா பரவல் அதிகரித்து வருவதால் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

முன்னதாக, ஏப்ரல் 24 முதல் ஜூன் 30 வரை பயணிகள் விமானங்களை அமீரகம் நிறுத்தி வைத்துள்ளது. 

மேலும், கடந்த 14 நாள்களில் இந்தியா வழியாக பயணம் செய்த பயணிகள் ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கு வருவதைத் தடை விதித்தது. 

ஐக்கிய அரபு எமிரேட், கோல்டன் விசாக்கள் வைத்திருப்பவர்கள் கரோனா நெறிமுறைகளுக்கு இணங்க தூதரக பணிகள் உறுப்பினர்கள் பயணத்திற்கு விலக்கு அளிக்கப்படுவார்கள் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com