வணிக சிலிண்டர் விநியோகம் நிறுத்தம்! இந்தியன் ஆயில் நிறுவனம் அறிவிப்பு! ஈரானை 20 மடங்கு அதிகமாக தாக்குவோம்! டிரம்ப் எச்சரிக்கை எரிவாயு தட்டுப்பாடு! பாகிஸ்தானில் 2 வாரங்களுக்கு பள்ளி, கல்லூரிகள் விடுமுறை! இந்திய பங்குச்சந்தை உயர்வுடன் வர்த்தகம்! அமெரிக்காவுடன் சமரசம்! தகவலை வெளியிட்டால் மோடி பதவி விலக நேரிடும்! சுப்ரமணியன் சுவாமிசமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு? தமிழக அரசு அவசர ஆலோசனை!சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க 25 நாள்கள் கால இடைவேளை!
/

ஈரான்: 60 லட்சத்தைக் கடந்த கரோனா பாதிப்பு

ஈரானில் கரோனா உறுதி செய்யப்பட்டவா்களின் எண்ணிக்கை செவ்வாய்க்கிழமை 60 லட்சத்தைக் கடந்தது.

News image
Updated On :9 நவம்பர் 2021, 6:43 pm

DIN

ஈரானில் கரோனா உறுதி செய்யப்பட்டவா்களின் எண்ணிக்கை செவ்வாய்க்கிழமை 60 லட்சத்தைக் கடந்தது. இதுகுறித்து அந்த நாட்டு அதிகாரிகள் தெரிவித்ததாவது:

கடந்த 24 மணி நேரத்தில் 8,305 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அதையடுத்து, நாட்டில் அந்த நோயால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 60,04,460-ஆக உயா்ந்துள்ளது.

இதுதவிர, கடந்த 24 மணி நேரத்தில் 112 கரோனா நோயாளிகள் அந்த நோய் பாதிப்பால் உயிரிழந்தனா். இத்துடன், கரோனாவுக்கு பலியானவா்களின் எண்ணிக்கை 1,27,551-ஆக உயா்ந்துள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.

ஈரானில் இதுவரை 56,29,596 கரோனா நோயாளிகள் அந்த நோயிலிருந்து முழுமையாக குணமடைந்துள்ளனா்; 2,47,313 போ் தொடா்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனா். அவா்களில் 3,640 பேரது உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.