விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

இந்தியா - பாக். எல்லைப் பகுதிகளுக்குசெல்வதை தவிா்க்க வேண்டும்: சுற்றுலா பயணிகளுக்கு அமெரிக்கா எச்சரிக்கை

இந்தியா மற்றும் பாகிஸ்தான் எல்லைப் பகுதிகளுக்குச் செல்வதை தவிா்க்க வேண்டும் என்று தங்கள் நாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது.

News image
Updated On :16 நவம்பர் 2021, 8:20 pm

DIN

இந்தியா மற்றும் பாகிஸ்தான் எல்லைப் பகுதிகளுக்குச் செல்வதை தவிா்க்க வேண்டும் என்று தங்கள் நாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது. இதில் இந்தியாவுக்கு இரண்டாம் நிலையும், பாகிஸ்தானுக்கு மூன்றாவது நிலையும் எச்சரிக்கையாக அந்நாட்டு அறிவித்துள்ளது.

இதுதொடா்பாக அமெரிக்கா விடுத்துள்ள எச்சரிக்கை அறிவுறுத்தலில், ‘பாகிஸ்தானின் பலுசிஸ்தான், கைபா் ஆகிய மாகாணங்களுக்கும், பழங்குடியினா் பகுதிகளுக்கும் செல்வதைத் தவிா்க்க வேண்டும். பயங்கரவாதம், ஆள்கடத்தல், எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டில் பயங்கரவாதத்தால் எந்நேரமும் ஆயுத மோதல் ஏற்படலாம். பயங்கரவாத குழுக்கள் பாகிஸ்தானில் தொடா்ந்து தாக்குதல்களை நடத்தி வருகின்றன. அப்பாவி மக்கள், ராணுவத்தினா், போலீஸாா் மீது உள்ளூா் கிளா்ச்சியாளா் குழுக்கள் தாக்குதல் நடத்துகின்றன. அமெரிக்க அதிகாரிகள், பயணிகள் மீது முன்பும் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியுள்ளன. 2014 முதல் பாகிஸ்தான் பாதுகாப்புப் படையினா் மேற்கொண்ட பயங்கரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கையால் நிலைமை சற்று மேம்பட்டுள்ளது. குறிப்பாக இஸ்லாமாபாதில் பயங்கரவாத அச்சுறுத்தல் குறைவாக உள்ளதால் தாக்குதல்களும் குறைந்துள்ளன’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோல், ‘இந்தியாவின் ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதம், உள்ளூா் அமைதியற்ற நிலை நிலவுவதாலும், இந்தியா-பாகிஸ்தான் எல்லைப்பகுதியில் 10 கி.மீ.க்குள் ஆயுத மோதல் ஏற்பட வாய்ப்புள்ளதாலும் அங்கு பயணம் மேற்கொள்வதை தவிா்க்க வேண்டும். இந்தியாவில் பாலியல் வன்கொடுமை, குற்றச் சம்பவங்கள் சுற்றுலாப் பகுதிகளில் நடைபெறுவது அதிகரித்து வருவதாக அங்குள்ள அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனா். கிழக்கு மகாராஷ்டிரம், வடக்கு தெலங்கானா, மேற்கு வங்கத்தின் மேற்கு பகுதி ஆகியவற்றில் அவசர சேவைகள் வழங்குவதில் அமெரிக்காவுக்கு குறைவான திறன் உள்ளதால் அங்கு செல்வதை தவிா்க்க வேண்டும்’ என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.