நிகரகுவா அதிபர் அமெரிக்காவிற்குள் நுழைய தடை

நிகரகுவா நாட்டின் நான்காவது அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டேனியல் ஓர்டேகா மற்றும் துணை அதிபர் ரொசாரியோ ஆகியோர் அமெரிக்க நாட்டிற்குள் நுழைய தடை விதிக்கப்படுவதாக அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.
டேனியல் ஓர்டேகா
டேனியல் ஓர்டேகா

நிகரகுவா நாட்டின் நான்காவது அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டேனியல் ஓர்டேகா மற்றும் துணை அதிபர் ரொசாரியோ ஆகியோர் அமெரிக்க நாட்டிற்குள் நுழைய தடை விதிக்கப்படுவதாக அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.

லத்தீன் அமெரிக்க நாடுகளில் ஒன்றாக அறியப்படும் நிகரகுவா நாட்டின் அதிபர் தேர்தல் கடந்த நவம்பர் 7ஆம் தேதி நடைபெற்றது. 65.23 சதவிகிதம் வாக்குகள் பதிவான அதிபர் தேர்தலில் 75.9 சதவிகிதத்திற்கும் அதிகமான வாக்குகள் பெற்று ஆளும் இடதுசாரி கட்சியின் டேனியல் ஓர்டேகா வெற்றி பெற்றார்.

துணை அதிபர் பதவிக்கான தேர்தலில் அதே கட்சியின் ரொசாரியோ முரில்லோவும் வெற்றி பெற்ற நிலையில் நான்காவது முறையாக மீண்டும் நிகரகுவாவை ஆட்சி புரிய உள்ளனர்.

இந்நிலையில் நிகரகுவா தேர்தலில் வென்ற இடதுசாரி கட்சியின் டேனியல் ஓர்டேகா, ரொசாரியோ ஆகியோர் அமெரிக்க நாட்டிற்குள் நுழைய அந்நாட்டின் அதிபர் ஜோ பைடன் தடை விதித்துள்ளார்.

நிகரகுவா தேர்தல் நேர்மையாக நடக்கவில்லை எனவும், பதிவான வாக்குகள் குறிப்பிடத்தக்க வாக்குகளை நிராகரிக்க வேண்டும் எனவும் அமெரிக்க மாகாணங்கள் அமைப்பு தெரிவித்திருந்ததைத் தொடர்ந்து இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

நிகரகுவா அரசுக்கு எதிரான அமெரிக்க அரசின் சதி வேலைகளை மக்கள் புறக்கணித்துள்ளதாக அந்நாட்டின் அதிபர் ஓர்டேகா தெரிவித்துள்ளார்.

1979இல் நிகரகுவா ஆட்சியை கலைத்து நாட்டைக் கைப்பற்றியவர் டேனியல் ஓர்டேகா என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com