அமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் போர்: சர்வதேச அளவில் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் - பிரான்ஸ் அதிபர்!தமிழ்நாட்டில் 17 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்களைப் பாதுகாக்க உடனடி நடவடிக்கை: அரசுக்கு ராகுல் காந்தி வலியுறுத்தல்ஆந்திரம்: பட்டாசு ஆலை விபத்தில் பலி எண்ணிக்கை 18-ஆக உயர்வுபஹ்ரைன் நாட்டிலுள்ள தமிழர்கள் பாதுகாப்பாக உள்ளதாக தகவல்மத்திய கிழக்கு நாடுகளுக்கு விமான சேவை நிறுத்தம்!சரணடையுங்கள் அல்லது மரணத்தை எதிர்கொள்ளுங்கள்: ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கைகாங்கிரஸுக்கு ஒரு மாநிலங்களவை சீட் தருவதாக முதல்வர் உறுதி! செல்வப்பெருந்தகை தகவல்ஈரான் மீது இஸ்ரேல் திடீர் தாக்குதல்! கமேனியின் நிலை என்ன?அண்ணா அறிவாலயத்தில் திமுக கூட்டணி கட்சிகள்! தொகுதிப்பங்கீடு பேச்சுவார்த்தை தீவிரம்!!
/

இலங்கையில் படகு கவிழ்ந்ததில் 6 மாணவர்கள் பலி; 11 பேர் காயம்; மீட்புப்பணி தீவிரம்

இலங்கையில் படகு கவிழ்ந்து விபத்து ஏற்பட்டதில் பள்ளி மாணவர்கள் 6 பேர் உயிரிழந்தனர். 

News image
காணாமல் போனவர்களை தேடும் பணியில் மீட்புப்படையினர்.
Updated On :28 ஜனவரி 2024, 5:31 am

DIN

இலங்கையில் படகு கவிழ்ந்து விபத்து ஏற்பட்டதில் பள்ளி மாணவர்கள் 6 பேர் உயிரிழந்தனர். 

இலங்கையில் திரிகோணமலை மாவட்டம் கின்னியா பகுதியில் குறிஞ்சங்கேணி பாலம் அருகே படகு ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. 

இதில் 20 க்கும் மேற்பட்டோர் பயணித்த நிலையில் படகு கவிழ்ந்ததில் அனைவரும் நீருக்குள் மூழ்கினர். இதில் பள்ளி மாணவர்கள் 6 பேர் உயிரிழந்துள்ளதாகத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 11 பேர் காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.  தொடர்ந்து இலங்கை கடற்படை மீட்புப்பணியில் ஈடுபட்டு வருகிறது. 

படகில் சென்ற அனைவருமே பள்ளி மாணவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. மீட்கப்பட்ட சிலரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால் உயிர்ப்பலி அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது. 

பள்ளி மாணவர்கள் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.