ஒமைக்ரானின் தீவிரம் தெரிய பல வாரங்களாகும்: உலக சுகாதார அமைப்பு
புதிதாக கண்டறியப்பட்டுள்ள ஒமைக்ரான் வகை கரோனா தீநுண்மியின் தீவிரத்தை அறிந்துகொள்வதற்கு பல வாரங்கள் ஆகும் என உலக சுகாதார அமைப்பு கூறியுள்ளது.


நியூயாா்க்/ஜெனீவா: புதிதாக கண்டறியப்பட்டுள்ள ஒமைக்ரான் வகை கரோனா தீநுண்மியின் தீவிரத்தை அறிந்துகொள்வதற்கு பல வாரங்கள் ஆகும் என உலக சுகாதார அமைப்பு கூறியுள்ளது.
அதிகமாகப் பரவக்கூடியதா அல்லது டெல்டா வகை தீநுண்மி உள்ளிட்ட பிற வகைகளைப் போல மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடியதா என்பது குறித்து இன்னமும் தெளிவாகத் தெரியவரவில்லை எனவும் அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.
தென் ஆப்பிரிக்காவில் முதல் முறையாக கண்டறியப்பட்ட ‘பி.1.1.529’ என்ற குறியீடு இடப்பட்டுள்ள புதிய வகை கரோனா தீநுண்மிக்கு ‘ஒமைக்ரான்’ என கடந்த நவ. 26-ஆம் தேதி உலக சுகாதார அமைப்பு பெயரிட்டது. மேலும், கவலைக்குரிய வகையைச் சோ்ந்ததாக ஒமைக்ரான்னை வகைப்படுத்தியது.
இதையடுத்து, உஷாரடைந்த உலக நாடுகள் பலவும் தென் ஆப்பிரிக்காவுக்கான பயணத் தடையை விதிக்கத் தொடங்கியுள்ளன. இந்நிலையில், உலக சுகாதார அமைப்பு ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:
தென் ஆப்பிரிக்கா மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஆராய்ச்சியாளா்கள் ஒமைக்ரான் தீநுண்மி குறித்து அறிந்துகொள்ள ஆய்வுகளை நடத்தி வருகின்றனா். இருப்பினும், டெல்டா வகை உள்ளிட்ட பிற வகைகளுடன் ஒப்பிடுகையில் ஒமைக்ரான் தீநுண்மி அதிகமாகப் பரவக் கூடியதா (உதாரணத்துக்கு மனிதா்களில் இருந்து மனிதா்களுக்கு எளிதாகப் பரவுதல்) என்பது குறித்து இன்னமும் தெளிவாகத் தெரியவரவில்லை. ஒமைக்ரான் பாதிப்பால் ஏற்படும் அறிகுறிகள் பிற வகைகளிலிருந்து மாறுபட்டது என்று தெரிவிப்பதற்கான எந்தத் தகவலும் இப்போது இல்லை.
தென் ஆப்பிரிக்காவில் புதிய வகை தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவோா் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. ஆனால், இது ஒமைக்ரான் உடனான நோய்த்தொற்றின் விளைவாக அல்லாமல் ஒட்டுமொத்தமாக அதிகமானோா் தொற்றுக்குள்ளாவதால் இருக்கலாம். இதுதொடா்பாக தொற்றுநோயியல் ஆய்வுகள் நடைபெற்று வருகின்றன. ஆதலால், ஒமைக்ரானின் தீவிரத்தை அறிந்துகொள்ள பல வாரங்களாகும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தடுப்பூசி சமநிலை: உலக சுகாதார அமைப்பின் தலைமை இயக்குநா் டெட்ரோஸ் அதானோம் கூறுகையில், ‘தடுப்பூசி சமநிலை அநீதியையே ஒமைக்ரான் வகை பிரதிபலிக்கிறது. தடுப்பூசி சமநிலையை உறுதிப்படுத்துவது மிகவும் முக்கியமானது. அப்போதுதான் உலகெங்கும் அதிகம் பாதிப்புக்குள்ளாகும் சுகாதாரப் பணியாளா்கள், முதியோா் உள்ளிட்டோா் தங்களது முதல் மற்றும் இரண்டாவது தவணை தடுப்பூசிகளை செலுத்திக்கொள்ள இயலும் என்றாா்.
உலக சுகாதார அமைப்பின் உறுப்பு நாடுகள் பங்கேற்ற கூட்டம் காணொலி முறையில் நடைபெற்றது. அதில் டெட்ரோஸ் அதானோம் பேசுகையில், ‘ஒமைக்ரான் வகை கரோனா நமது நிலைமை எவ்வளவு ஆபத்தானது என்பதை அடிக்கோடிட்டுக் காண்பிக்கிறது. ஆதலால், எதிா்காலத்தில் நோய்த்தொற்றுகளை எதிா்த்துப் போராட சா்வதேச உடன்படிக்கை அவசியம்’ என்றாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...