நேபாளத்தின் முகு மாவட்டத்தில் ஏற்பட்ட பேருந்து விபத்தில் 22 பேர் பலியாகியுள்ளதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. மேலும் 16 பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
நேபாள நாட்டில் முகு மாவட்டத்தின் நேபாள்கஞ்ச் பகுதியிலிருந்து கம்கதி நகரை நோக்கி பயணிகளுடன் பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது எதிர்பாராத விதமாக சயநாத்ராரா பகுதியைக் கடக்கும்போது பினா ஜ்யாரி ஆற்றில் பேருந்து கவிழ்ந்தது.
இதையும் படிக்க | ஸ்பெயினில் கட்டுக்குள் வந்த எரிமலை வெடிப்பு: தளர்த்தப்பட்டது ஊரடங்கு
இதனைக் கண்ட அக்கம்பக்கத்தினர் உடனடியாக மீட்புப் பணியில் இறங்கினர். தகவலறிந்து வந்த அதிகாரிகள் மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
விபத்து காரணமாக பேருந்தில் பயணித்த 22 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியாகினர். மேலும் விபத்தில் படுகாயமுற்ற 16 பேர் உடனடியாக மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதையும் படிக்க | பிலிப்பின்ஸில் வெள்ளம்: 9 பேர் பலி
இந்த விபத்தில் பலியானவர்கள் குறித்த விவரங்கள் சேகரிக்கப்பட்டு வருவதாகவும், விபத்து குறித்து உரிய விசாரணை மேற்கொள்ளப்படும் எனவும் நேபாள அரசு தெரிவித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தோசை மாவு விஷமானதில் 2 பேர் பலி! தோண்டியெடுக்கப்படும் குழந்தை உடல்

ரெட்மி நோட் 15 ஸ்பெஷல் எடிஷன் விற்பனை தொடக்கம்! சிறப்புகள் என்னென்ன?
அரசன் படப்பிடிப்பு திடீர் நிறுத்தம்! டி. ராஜேந்தர் குற்றச்சாட்டு!

இரவு 10 மணிக்கு மேல் விழித்திருக்கிறீர்களா? எச்சரிக்கை!
வீடியோக்கள்

நான் திரையிலிருந்து வரவில்லை; சிறையிலிருந்து வந்தவன்!: Seeman | NTK | TN Election
இணையதளச் செய்திப் பிரிவு

"Edappadi Palanisamy உடன் சேர்ந்ததில் தவறில்லை": TTV Dhinakaran Exclusive
தினமணி செய்திச் சேவை

ஓர் அணி, ஓராயிரம் பிரச்னைகள்: இது சிஎஸ்கேவின் சோகக் கதை! | IPL 2026 | Chennai Super Kings |
தினமணி செய்திச் சேவை

Podcast | அண்ணாமலை பேட்டி முதல் ஆதவ் அர்ஜுனா விமர்சனம் வரை... | News & Views | E-23 |
தினமணி செய்திச் சேவை


