வியத்நாம் படகு விபத்து: பழனியைச் சேர்ந்தவர் பலி! படகில் சென்ற தமிழர்கள் விவரம்!மாமல்லபுரம் அருகே மின்சாரம் பாய்ந்து 4 பேர் பலி அடுத்த 20 ஆண்டுகளும் தமிழ்நாட்டின் முதல்வர் விஜய்தான்! - என். ஆனந்த் மீண்டுமா? ஆந்திரத்தில் பரவும் கரோனா-19! 2 பேர் பலியானதால் பதற்றம்!!வியட்நாமில் படகு கவிழ்ந்து விபத்து! 15 இந்தியர்கள் பலி எனத் தகவல்வயநாடு நிலச்சரிவில் பலியானோர் குடும்பத்துக்கு ரூ. 5 லட்சம் நிவாரணம்! நான் காந்தியோ நாயகனோ அல்ல! உண்ணாவிரதப் போராட்டத்தில் சோனம் வாங்சுக் போலிச் சான்றிதழ்கள்! 3,000 ஆசிரியர்கள் பணிநீக்கம்! வட்டியுடன் சம்பளத்தைத் திரும்பப்பெற முடிவு தமிழகத்துக்கு கூடுதலாக 100 எம்பிபிஎஸ் இடங்கள் ஒதுக்கீடு!
/

அரசன் படப்பிடிப்பு திடீர் நிறுத்தம்! டி. ராஜேந்தர் குற்றச்சாட்டு!

நடிகர் டி. ராஜேந்தரின் பேச்சு வைரலாகியுள்ளது...

News image
Updated On :7 ஏப்ரல் 2026, 4:44 pm IST

அரசன் திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டதாக டி. ராஜேந்தர் குற்றம் சாட்டியுள்ளார்.

இயக்குநர் வெற்றி மாறன் இயக்கத்தில் சிலம்பரசன் நடிப்பில் உருவாகும் அரசன் திரைப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதனை, வி கிரியேஷன்ஸ் மூலம் கலைப்புலி எஸ். தாணு பெரிய பட்ஜெட்டில் தயாரித்து வருகிறார்.

இந்த நிலையில், இப்படத்தின் படப்பிடிப்பு இன்று நிறுத்தப்பட்டதாக டி. ராஜேந்தர் ஆடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், “அரசன் திரைப்படத்தின் படப்பிடிப்பை நிறுத்தியிருக்கிறார்கள். நிறுத்தியது யார்? நிறுத்தச் சொன்னது யார்? நான் அரசனுக்காவோ அல்லது சிலம்பரசனுக்காகவோ வாதாட வரவில்லை. தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம் அறம் தவறி நடந்துவிடக்கூடாது என்றே பேசுகிறேன். தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் என் மகன் சிலம்பரசனை வைத்து, வெந்து தணிந்தது காடு திரைப்படத்தை எடுத்தபோது எழுந்த பிரச்னைகளுக்காக அவர் நீதிமன்றத்தை நாடினார். அங்கு, வழக்கு முடிக்கப்பட்டதுடன் தயாரிப்பாளரிடமிருந்து இரண்டாவது படத்திற்குப் பெறப்பட்ட முன்பணம் சிலம்பரசனையே சாரும் என தீர்ப்பு கிடைத்தது.

இந்த நிலையில், பழைய வழக்கை எடுத்துக்கொண்டு தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கமும் தென்னிந்திய திரைப்படத் தொழிலாளர்கள் நலச் சம்மேளனமும் இணைந்து இன்று நடைபெற்றுக்கொண்டிருந்த அரசன் படப்பிடிப்பை நிறுத்தியுள்ளனர்.

ஒரு தயாரிப்பாளருக்காக, தயாரிப்பாளர் சங்கமே முன்னின்று படப்பிடிப்பை நிறுத்தியுள்ளது. இந்த தருணத்தில், இவ்விஷயத்தில் தென்னிந்திய நடிகர் சங்கம் சிலம்பரசனுடன் நின்று உரிமையைப் பெற்றுத்தர வேண்டும் எனக் கோரிக்கை வைக்கிறேன். மேலும், தேர்தல் நேரத்தில் நீதிமன்றத்தின் தீர்ப்பை அவமதிக்கும் வகையில் படப்பிடிப்பை நிறுத்திக் காட்டியிருக்கிறார்களே, இது நியாயமா? எனக் கேள்வியும் கேட்கிறேன்” எனக் கூறியுள்ளார். மேலும், டி. ராஜேந்தர் விரைவில் பத்திரிகையாளர்களைச் சந்தித்து இதுகுறித்து பேச உள்ளாராம்.

அண்மையில், நடைபெற்று முடிந்த தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத் தேர்தலில் லைகா நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ஜி. கே. எம். தமிழ் குமரன் தலைவராகத் தேர்வு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Summary

T. Rajendar has alleged that the shooting of the movie Arasan has been stopped.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.