தமிழ்நாட்டில் அதிகரிக்கும் டெங்கு! இதுவரை 17,348 பேர் பாதிப்பு!தொடர் சரிவில் தங்கம் விலை! இன்றைய நிலவரம்வடகிழக்கு பருவமழை: மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் விஜய் 2-வது நாளாக ஆலோசனை!புதிய சொத்துக்குவிப்பு வழக்கில் இருந்து எம்.ஆர்.கே.பன்னீர்செல்வத்தை விடுவிக்க மறுப்புகாமராஜர் காலை உணவுத் திட்டம்: முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார்!பொன்னேரியில் மருத்துவமனை ஊழியரை பெட்ரோல் ஊற்றி கொல்ல முயன்றவர் சுட்டுப்பிடிப்புமேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் மழை வாய்ப்பு2027 மாா்ச்-க்குள் 1 லட்சம் வீடுகளில் மேற்கூரை சூரியசக்தி மின்சாரம்: நிர்மல்குமாா்தனியாா் பேருந்து கட்டண உயா்வு: தமிழக அரசு அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு

ஒரே நேரத்தில் அரசன், ராஜன் வகையறா படப்பிடிப்பு!

அரசன் படப்பிடிப்பு குறித்து...

silambarasan and vetri maaran

இயக்குநர் வெற்றி மாறன், சிலம்பரசன்

Published On :

அரசன் திரைப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாகியுள்ளது.

வெற்றிமாறன் இயக்கத்தில் நடிகர் சிலம்பரசன் நடிக்கும் அரசனின் அறிவிப்பு விடியோ வெளியானதிலிருந்து பெரிய எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது. அனிருத்தின் பின்னணி இசையும் ஹிட் அடித்ததால் இப்படம் எப்போது வருமென ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

கலைப்புலி எஸ். தாணு தயாரிக்கும் இந்தப் படத்தை இந்தாண்டு திரைக்குக் கொண்டுவர திட்டமிட்டு, விரைந்து படப்பிடிப்பை முடிக்க படக்குழுவினர் முடிவெடுத்திருந்த நிலையில் சிலம்பரசன் மற்றும் தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் இடையே ஏற்பட்ட பிரச்னை காரணமாக படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது.

பின், மீண்டும் துவங்கி நடைபெற்று வருகிறது. ஆனால், அரசனுடன் ’ராஜன் வகையறா’ படத்தின் படப்பிடிப்பையும் வெற்றி மாறன் நடத்தி வருவதால் அரசன் படப்பிடிப்பு தொடர்ச்சியாக நடைபெறாமல் தாமதமாக ஓரிரு நாள்கள் இடைவேளை விட்டு எடுக்கப்பட்டு வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால், திட்டமிட்ட தேதிக்குள் படப்பிடிப்பை நிறைவு செய்வதில் தாமதம் ஏற்படலாம் எனத் தெரிகிறது இரு படங்களும் அடுத்தடுத்து வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ராஜன் வகையறாவில் நடிகர் கென் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

It is reported that the filming of the movie Arasan is proceeding behind schedule.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.