
பிலிப்பின்ஸ் நாட்டில் பெய்துவரும் கனமழை காரணமாக இதுவரை 9 பேர் பலியாகியுள்ளனர். மேலும் மழை வெள்ளத்தால் ஏற்பட்ட நிலச்சரிவில் இதுவரை 11 பேர் காணாமல் போயுள்ளனர்.
பிலிப்பின்ஸ் நாட்டில் கடந்த சில தினங்களாக பலத்த மழை பெய்துவருகிறது. இந்த திடீர் மழைப்பொழிவால் வடக்கு பிலிப்பின்ஸானது கடுமையான சேதங்களை சந்தித்துள்ளது.
இதையும் படிக்க | தலிபான்களுக்கு சவால் ஐஎஸ்கே!
வெப்பமண்டல புயல் தென் சீனக் கடலில் காகயன் மாகாணத்திற்கு மேற்கே சுமார் 315 கிலோமீட்டர் தூரத்தில் மணிக்கு 100 கிலோமீட்டர் (62 மைல்) வேகத்தில் காற்று வீசியதாக வானிலை அதிகாரிகள் தெரிவித்தனர். பலத்த காற்றுடன் பெய்த கனமழையால் சாலைகளில் மரங்கள் விழுந்துள்ளதால் போக்குவரத்து தடைபட்டுள்ளது. மேலும் மின்சார வசதி துண்டிக்கப்பட்டுள்ளதால் மக்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
மழைவெள்ளத்தால் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி பெங்குவாட் பகுதியில் ஒரு காவலர் உள்பட 5 பேர் பலியாகினர். மேற்கு பலவான் மாகாணத்தில் உள்ள நர்ரா நகரில் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி இதுவரை 4 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதையும் படிக்க | சீனாவில் பலத்த மழை: ஆயிரக்கணக்கான வீடுகள் சேதம்
மேலும் காணாமல் போன 4 பேரைத் தேடும் பணிகள் நடைபெற்று வருகிறது. கடும்வெள்ளம் காரணமாக 1600க்கும் மேற்பட்டவர்கள் பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். ஒவ்வொரு ஆண்டும் சுமார் 20 புயல்கள் பிலிப்பின்ஸைத் தாக்குகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.