
பிரேசிலில் அதிகரித்துவரும் கரோனா மரணங்கள் தொடர்பாக செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு அந்நாட்டின் அதிபர் போல்சனாரோ தெரிவித்துள்ள பதில் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.
கரோனா தொற்று பரவல் காரணமாக உலக நாடுகள் பலவற்றிலும் முன்னெச்சரிக்கையாக தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. எனினும் கரோனாவால் பலியாகிறவர்களின் எண்ணிக்கை குறிப்பிட்ட சில நாடுகளில் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. பிரேசில் நாட்டில் கரோனாவால் பலியாகிறவர்களின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்தவண்ணம் உள்ளது.
இதையும் படிக்க | நேபாளத்தில் ஆற்றில் பேருந்து கவிழ்ந்து விபத்து: 22 பேர் பலி
அந்நாட்டில் இதுவரை 6 லட்சத்துக்கும் அதிகமானோர் கரோனா தொற்று பாதிப்பால் பலியாகியுள்ளனர். கரோனா தடுப்பு நடவடிக்கைகளை அரசு முழுமுயற்சியுடன் மேற்கொள்ளவில்லை என விமர்சனங்கள் எழுந்து வருகின்றன.
இந்நிலையில் செய்தியாளரின் சந்திப்பில் கரோனா மரணங்கள் தொடர்பாக எழுப்பப்பட்ட கேள்விக்கு அதிபர் போல்சனாரோ தெரிவித்த கருத்து சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.
செய்தியாளரின் கேள்விக்கு பதிலளித்த போல்சனாரோ, எந்த நாட்டில்தான் மக்கள் இறக்கவில்லை எனக் கூறுங்கள். நான் இங்கு ’போரடிப்பதற்காக’ வரவில்லை எனத் தெரிவித்தார்.
இதையும் படிக்க | ஸ்பெயினில் கட்டுக்குள் வந்த எரிமலை வெடிப்பு: தளர்த்தப்பட்டது ஊரடங்கு
கரோனா மரணங்களில் அமெரிக்காவிற்கு அடுத்தபடியாக இரண்டாவது இடத்தில் பிரேசில் உள்ளது. இதுவரை அந்நாட்டில் 6,01,011 பேர் கரோனாவால் பலியகியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.