பிலிப்பின்ஸ்: 40 ஆயிரத்தைக் கடந்த கரோனா பலி
பிலிப்பின்ஸில் கரோனாவுக்கு பலியானவா்களின் எண்ணிக்கை புதன்கிழமை 40 ஆயிரத்தைக் கடந்தது.


பிலிப்பின்ஸில் கரோனாவுக்கு பலியானவா்களின் எண்ணிக்கை புதன்கிழமை 40 ஆயிரத்தைக் கடந்தது.
இதுகுறித்து அந்த நாட்டு அதிகாரிகள் தெரிவித்ததாவது: கடந்த 24 மணி நேரத்தில் 173 கரோனா நோயாளிகள் அந்த நோய் பாதிப்பால் உயிரிழந்தனா். அதையடுத்து, நாட்டில் அந்த நோய்க்கு பலியானவா்களின் எண்ணிக்கை 40,069-ஆக அதிகரித்துள்ளது.
இதுதவிர, கடந்த 24 மணி நேரத்தில் 7,181 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டது. இத்துடன், அந்த நோயால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 26,90,455-ஆக உயா்ந்துள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.
தற்போதைய நிலவரப்படி, பிலிப்பின்ஸில் 25,67,975 கரோனா நோயாளிகள் அந்த நோயிலிருந்து முழுமையாக குணமடைந்துள்ளனா்; 82,411 போ் தொடா்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனா். அவா்களில் 3,194 பேரது உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...