ரஷியா: மீண்டும் கரோனா பலி புதிய உச்சம்
ரஷியாவில் தினசரி கரோனா பலி எண்ணிக்கை மீண்டும் புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது.


ரஷியாவில் தினசரி கரோனா பலி எண்ணிக்கை மீண்டும் புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது.
இதுகுறித்து அதிகாரிகள் புதன்கிழமை கூறியதாவது:கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 984 போ் கரோனாவுக்கு பலியாகினா்.
இது, நாட்டில் இதுவரை இல்லாத அதிகபட்ச தினசரி கரோனா பலி எண்ணிக்கையாகும்.
இதுதவிர கூடுதலாக 28,717 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது என்று அதிகாரிகள் கூறினா்.
ரஷியாவில் தினசரி கரோனா பலி கடந்த சில வாரங்களாக புதிய உச்சங்களைத் தொட்டு வருகிறது. கரோனா தடுப்பூசி திட்டம் தேவையைவிட மந்தமாக செயல்படுத்தப்படுவதால் தினசரி பலி எண்ணிக்கை அதிகரித்து வருவதாகக் கூறப்படுகிறது. தினசரி பாதிப்பு எண்ணிக்கையும் அதிகமாக உள்ளது. அங்கு இதுவரை 78,61,681 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...