பிரத்யேக சமூக வலைதளத்தை தொடங்கினார் டிரம்ப்!

தனக்கென பிரத்யேக சமூக வலைத்தளத்தை தொடங்கியுள்ளார் அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப்.
அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப்
அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப்


தனக்கென பிரத்யேக சமூக வலைத்தளத்தை தொடங்கியுள்ளார் அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப்.

கடந்த ஆண்டு நடைபெற்ற அதிபா் தோ்தலில் முறைகேடு நடைபெற்றதாக அப்போது அதிபராக இருந்த டிரம்ப் குற்றம் சாட்டினாா். இதுதொடா்பாக அவா் நாடாளுமன்றக் கலவரத்தை அவா் தூண்டியதாகக் கூறி, ட்விட்டா், பேஸ்புக் நிறுவனங்கள் அவரது கணக்கை நிரந்தரமாக முடக்கியது.

சமூக ஊடகங்களில் இருந்து டிரம்ப் வெளியேற்றப்பட்டு 9 மாதங்களுக்குப் பிறகு, 'உண்மை சமூகம்' (ட்ரூத் சோஷியல்) என்ற பெயரில் தனக்கென பிரத்யேக சமூக வலைதளத்தை புதன்கிழமை தொடங்கியுள்ளார். 

ட்விட்டர் போன்ற வலைதளங்களில் தலிபான்கள் ஆதிக்கம் அதிகயளவில் இருக்கும் உலகில் நாம் வாழ்கிறோம். ஆனால் உங்களுக்கு பிடித்த டிரம்ப் 'ட்ரூத் சோஷியல்' மூலம் சமூக வலைத்தளங்களுக்கு இடையேயான போட்டியில் ஒரு திருப்புமுனையை உருவாக்குவோம் என கருத்து தெரிவித்துள்ளார். 

இதையும் படிக்க | கரோனா தடுப்பூசி: உக்ரைனில் சாதனை

அடுத்த மாதம் தொடக்கத்தில் நாடு முழுவதும் இந்த செயலி அறிமுகப்படுத்தப்படும் என்றும், அடுத்த ஆண்டு தொடக்கத்தில், பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள், செய்திகள் கொண்ட விடியோ சேவையை வெளியிட திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. 

கடந்த ஜூலை மாதம் டிரம்பின் நீண்டகால உதவியாளர் ஜேசன் மில்லர் சொந்தமாக ஜெட்டர் என்ற சமூக ஊடக நிறுவனத்தை தொடங்கினார். மில்லர் சமூக ஊடக நிறுவனத்தை தொடங்கிய சிறிது நேரத்திலேயே மறுத்த டிரம்ப், ஜெட்டர், கேப், உள்ளிட்ட எந்த சமூக வலைதளங்களிலும் தான் இல்லை என அறிக்கையில் வெளியிட்டது குறிப்பிடத்தக்கது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com