சிரியா தாக்குதலில் அல்-காய்தா முக்கிய தலைவா் பலி
வடமேற்கு சிரியாவில் வெள்ளிக்கிழமை நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில் அல்-காய்தாவின் மூத்த தலைவா் அப்துல் ஹமீது அல்-மதாா் கொல்லப்பட்டதாக அமெரிக்க இராணுவம் தெரிவித்துள்ளது.


வடமேற்கு சிரியாவில் வெள்ளிக்கிழமை நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில் அல்-காய்தாவின் மூத்த தலைவா் அப்துல் ஹமீது அல்-மதாா் கொல்லப்பட்டதாக அமெரிக்க இராணுவம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அமெரிக்க படைகளின் மத்திய தலைமையக செய்தித் தொடா்பாளா் ஜான் ரிக்ஸ்பீ கூறுகையில், ஆளில்லா விமானம் மூலம் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாகக் கூறினாா்.
அல்-மதாா் கொல்லப்ப்பட்டதன் மூலம் மேலும் பல அப்பாவி மக்களின் உயிருக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் சதித் திட்டங்களை சிரியாவிலும் சிரியாவுக்கு வெளியிலும் அல்-காய்தா மேற்கொள்வதற்கு இடையூறு விளைவிக்கும்; மேலும், அல்-காய்தாவின் தாக்குதல் திறனைக் குறைக்கும் என்று ஜான் ரிக்ஸ்பீ கூறினாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...