நியூயார்க்கில் வரலாறு காணாத கனமழை பெய்து வரும் நிலையில், இன்று இரவுமுதல் அவசரநிலை அமல்படுத்தவுள்ளதாக மேயர் பில் டி பிளாசியோ வியாழக்கிழமை அறிவித்துள்ளார்.
அமெரிக்காவின் நியூயார்க் மாகாணத்தில் நேற்று இரவு பெய்த கனமழையால் பல்வேறு பகுதிகளில் வெள்ளநீர் சூழ்ந்துள்ளது. இந்நிலையில், மாகாணம் முழுவதும் இன்று இரவுமுதல் அவசரநிலை அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து நியூயார்க் மேயர் சுட்டுரையில் வெளியிட்ட செய்தியில்,
“நியூயார்க்கில் நேற்று இரவுமுதல் வரலாறு காணாத அளவில் வானிலை மோசமாக உள்ளது. மாகாணம் முழுவதும் பெய்த கனமழையால் சாலைகளில் வெள்ளநீர் சூழ்ந்து ஆபத்தான நிலை உருவாகியுள்ளது. இதனால், இன்று இரவுமுதல் அவசரநிலை அமல்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது.
இதுவரை 5,300 வாடிக்கையாளர்கள் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளதாக புகார் அளித்துள்ளனர்.
அடுத்த சில மணிநேரத்தில் மழை நிற்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதையடுத்து மாகாணம் முழுவதும் மீட்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். ஆகவே, சுரங்கப்பாதைகள் மற்றும் சாலையோரங்களில் யாரும் நிற்க வேண்டாம். அனைவரும் வீடுகளிலேயே இருக்க வேண்டும்.”
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

தையல் கலைஞா்களுக்கு ஓய்வூதியத்தை ரூ.3 ஆயிரமாக உயா்த்தி வழங்கக் கோரிக்கை
கானல் நீராகும் காவல் சீர்திருத்தம்!

கிருஷ்ணகிரி மாவட்ட மா விவசாயிகளுக்கு நம்பிக்கையூட்டும் பாதுகாப்புப் பை தொழில்நுட்பம்

காங்கேசன்துறைக்கு மாா்ச் 6 முதல் மீண்டும் பயணிகள் கப்பல் போக்குவரத்து
வீடியோக்கள்

காற்றில் ஊழல் செய்த கட்சி திமுக: எடப்பாடி பழனிசாமி | Edappadi Palaniswami
தினமணி வீடியோ செய்தி...

#t20wc | சஹிப்ஸதா ஃபர்ஹான் மட்டும் அடித்தால் போதுமா?: கோட்டைவிட்ட பாகிஸ்தான்! | T20 World Cup |
தினமணி வீடியோ செய்தி...

உறுதியாகும் பாஜக தொகுதிகள் ? | Admk | Bjp | Modi in madurai | Thiruparankundram visit | EPS
தினமணி வீடியோ செய்தி...

Thaai kizhavi movie review | Radikaa | Sivakarthikeyan
தினமணி வீடியோ செய்தி...

