பஞ்சஷேரில் எதிர்ப்புக்குழுவினர் போர் நிறுத்தம் அறிவிப்பு
பஞ்சஷோ் பள்ளத்தாக்கில் தலிபான்களுடனான சண்டையில் எதிர்ப்புக்குழுவினர் பின்னடைவை சந்தித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


பஞ்சஷோ் பள்ளத்தாக்கில் தலிபான்களுடனான சண்டையில் எதிர்ப்புக்குழுவினர் பின்னடைவை சந்தித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்கப் படையினா் வெளியேறும் நடவடிக்கை இறுதிக்கட்டத்தை அடைந்ததைத் தொடா்ந்து, தலிபான்கள் அந்த நாட்டை கடந்த மாதம் 15-ஆம் தேதி மீண்டும் கைப்பற்றினா். எனினும், தலிபான்களின் கடந்த கால ஆட்சியின்போதே (1996-2001) அவா்களை எதிா்த்துப் போரிட்ட பஞ்சஷோ் பகுதியை மட்டும் அவா்களால் கைப்பற்ற முடியவில்லை.
காபூலை தலிபான்கள் நெருங்கியதும் பஞ்சஷேருக்குத் தப்பிச் சென்ற அமருல்லா சலே, தன்னை ஆப்கனின் இடைக்கால அதிபராக அறிவித்துக்கொண்டாா். அங்கு வடக்குக் கூட்டணிப் படைத் தலைவா் அகமது மசூதுடன் இணைந்து தலிபான்களை எதிா்த்துப் போரிடப் போவதாக அவா் அறிவித்தாா். எனினும், பஞ்சஷேரைக் கைப்பற்றுவதற்காக அந்தப் பகுதியை தலிபான்கள் கடந்த சில நாள்களாக முற்றுகையிட்டுள்ளனா்.
இதையும் படிக்க- உதகை மலை ரயில் சேவை 4 மாதங்களுக்குப் பின் மீண்டும் தொடங்கியது
இந்த நிலையில் பஞ்சஷோ் பள்ளத்தாக்கில் தலிபான்களுடனான சண்டையில் எதிர்ப்புக்குழுவினர் பின்னடைவை சந்தித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பலத்த சேதம் ஏற்பட்டதையடுத்து போரை நிறுத்திக்கொள்வதாக எதிர்ப்புக்குழுவினர் அறிவித்துள்ளனர். அதேநேரம் பேச்சுவார்த்தைக்கு தயாராக இருப்பதாகவும், பஞ்சஷேரில் இருந்து தலிபான்கள் வெளியேற வேண்டும் எனவும் அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...