விசிகவுக்கு வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகள் எவை? நாளை உயர்நிலை ஆலோசனை!நாளை தேமுதிக மாவட்ட செயலர்கள் கூட்டம் ஆந்திரம்: கலப்பட பால் விவகாரம் - இறப்பு எண்ணிக்கை 16-ஆக உயர்வு!6 தொகுதிகள் என்பதில் உறுதியாக இருக்கிறோம்: மார்க்சிய கம்யூனிஸ்ட் 8,931 நாள்கள் சாதனை! பிரதமர் மோடிக்கு ராஜ்நாத் சிங் வாழ்த்துபுதுச்சேரி அதிமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!எரிபொருள் தட்டுப்பாடு: பிரதமர் மோடி தலைமையில் அமைச்சர்கள் ஆலோசனை!ஹோர்முஸ் நீரிணை அருகே 1,600 கி.மீ. தாக்கி அழிக்கும் அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்! ஹவாய் வெள்ளப்பெருக்கு: 5,500-க்கும் மேற்பட்ட மக்கள் பாதிப்பு!திமுக கூட்டணியிலிருந்து வெளியேறினார் வேல்முருகன்!
/

ஆப்கனில் விரைவில் இடைக்கால அரசு: தலிபான் செய்தித்தொடர்பாளர் தகவல்

தொழில்நுட்ப பிரச்னைகள் தீர்க்கப்பட்ட பிறகு ஆப்கானிஸ்தானில் இடைக்கால அரசு நிறுவப்படும் என தலிபான்கள் தெரிவித்துள்ளனர். 

News image
Updated On :6 செப்டம்பர் 2021, 7:14 am

DIN

தொழில்நுட்பப் பிரச்னைகள் தீர்க்கப்பட்ட பிறகு ஆப்கானிஸ்தானில் இடைக்கால அரசு நிறுவப்படும் என தலிபான்கள் தெரிவித்துள்ளனர். 

ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கப் படைகள் வெளியேறிய நிலையில், அந்நாட்டை தலிபான்கள் கைப்பற்றி அங்கு ஆட்சியமைப்பதற்கான நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகின்றனர். 

இந்நிலையில் ஆப்கானிஸ்தானில் இடைக்கால அரசு அமைப்பது குறித்து  தலிபான் செய்தித் தொடர்பாளர் ஜபிஹுல்லா முஜாஹித், 'ஆப்கானிஸ்தானில் இடைக்கால அரசு விரைவில் அமையவுள்ளது. சரியான தேதியை என்னால் இப்போது கூற முடியாது. ஆனால், மிக விரைவில் அமையும். அதற்கான பணிகளை மேற்கொண்டு வருகிறோம். 

தற்போதைய செயல்முறையின் சில தொழில்நுட்ப சிக்கல்களைத் தீர்ப்பதில் நாங்கள் மும்முரமாக இருக்கிறோம். துறைகளில் உள்ள தொழில்நுட்ப சிக்கல்களைத் தீர்த்தபின்னரே இடைக்கால அரசு அமையும் என்று தெரிவித்தார். 

அதுபோல, தலிபான் அனாமுல்லா சமங்கனி , 'நாங்கள் முற்றிலும் சுதந்திரமான ஆப்கானிஸ்தானில் வாழ்கிறோம். புதிய அரசுக்காக காத்திருக்கிறோம்' என்று தெரிவித்துள்ளார். 

அதேநேரத்தில் அங்குள்ள மக்கள்,  'அனைவரையும் உள்ளடக்கிய ஒரு அரசாங்கத்தை உருவாக்க வேண்டும். அரசை அமைத்து பொதுத்துறை நிறுவனங்கள் திறக்கப்பட வேண்டும்' என்று வலியுறுத்துகின்றனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.