மேற்கு ஆசிய நிலவரம் : குவைத் இளவரசருடன் பேசிய பிரதமர் மோடி!உலகின் மிகப் பெரிய இயற்கை எரிவாயு வயல் மீது இஸ்ரேல் தாக்குதல்! கத்தார் கண்டனம்!மேடைகளில் ஆபாசங்களையும் அவதூறுகளையும் பேசுகிறார்கள் - முதல்வர் மு.க. ஸ்டாலின்மார்ச் 23-ல் தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்தவெக குறித்து யார், என்ன அவதூறு பரப்பினாலும் நம்ப வேண்டாம் - விஜய்மதச்சார்பற்ற கொள்கையில் சமரசமில்லை, தவெக தலைமையில் ஆட்சி! - விஜய்
/

அமெரிக்க தேசியப் பூங்காவில் சிங்கங்கள், புலிகளுக்கு கரோனா தொற்று

அமெரிக்காவின் வாஷிங்டன் மிருகக்காட்சி சாலையில் உள்ள புலிகள் மற்றும் சிங்கங்களுக்கு கரோனா தொற்று பாதிப்பு இருப்பது பரிசோதனையின் மூலம் தெரியவந்துள்ளது.

News image
கோப்புப்படம்
Updated On :18 செப்டம்பர் 2021, 3:45 pm

DIN

அமெரிக்காவின் வாஷிங்டன் மிருகக்காட்சி சாலையில் உள்ள புலிகள் மற்றும் சிங்கங்களுக்கு கரோனா தொற்று பாதிப்பு இருப்பது பரிசோதனையின் மூலம் தெரியவந்துள்ளது.

உலகின் பல பகுதிகளில் உள்ள மிருகக்காட்சி சாலை விலங்குகளுக்கு கரோனா தொற்று பாதிப்பு இருப்பது சோதனையின் மூலம் கண்டறியப்பட்டு வருகிறது. 

இந்நிலையில் அமெரிக்காவின் வாஷிங்டன் டிசியில் உள்ள தேசிய உயிரியல் பூங்காவில் ஆறு ஆப்பிரிக்க சிங்கங்கள், சுமத்ரான் புலி மற்றும் இரண்டு அமுர் புலிகளுக்கு கரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

சோம்பல், இருமல் மற்றும் தும்மலின் அறிகுறிகளை கொண்டிருந்த புலிகள் மற்றும் சிங்கங்கள் பரிசோதனைக்குட்படுத்தப்பட்டதன் மூலம் தொற்று பாதிப்பு உறுதிசெய்யப்பட்டது.

பராமரிப்பாளரிடமிருந்து விலங்குகளுக்கு கரோனா தொற்று பரவியிருக்கலாம என மிருகக்காட்சிசாலையின் தலைமை கால்நடை மருத்துவர் தெரிவித்துள்ளார்.

முன்னதாக ஸ்பெயினின் பாா்சிலோனா, இலங்கை மற்றும் அமெரிக்காவின் பிராங்க்ஸ் நகரங்களில் உள்ள உயிரியல் பூங்காக்களில் சிங்கங்கள் மற்றும் புலிகள் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டது உறுதி செய்யப்பட்டது. இந்தியாவில் தெலங்கானா, செங்கல்பட்டு வண்டலூர், ஹைதராபாத்தில் உள்ள விலங்கியல் பூங்காக்களின் சிங்கங்களுக்கு கரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.