
ஏமனில் சவுதி தலைமையில் நடைபெற்ற வான்வழித் தாக்குதலில் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் 35 பேர் பலியாகியிருக்கிறார்கள்.
ஏமன் நாட்டில் மரீப் மாகாணத்தில் சிர்வா மாவட்டத்தில் சவுதி தலைமையிலான படையினர் வான்வழி தாக்குதல் நடத்தியுள்ளனர். இதில் ஹவுதி அமைப்பினரின் 13 வாகனங்கள் முற்றிலும் சேதமடைந்தது.
இதையும் படிக்க | ஜம்மு-காஷ்மீரில் ராணுவ ஹெலிகாப்டர் விபத்து: இரு விமானிகள் பலி
பின் எதிர் தாக்குதல் நடத்திய கிளர்ச்சியாளர்களில் 35 பேர் இறந்து விட்டதாக தகவல் வெளியாகியிருக்கிறது.
ஈரான் ஆதரவுடன் ஏமனின் மரீப் பகுதியில் எண்ணைக் கிணறுகளைக் கைப்பற்றும் முயற்சியில் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் கடந்த பிப்ரவரி மாதத்திலிருந்து ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.