விளம்பர வெறிக்கு சிறுவர்களா? வெட்கமாக இல்லையா? அண்ணாமலை கேள்வி! ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!தங்கம், வெள்ளி விலை அதிரடி குறைவு! வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது! வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி
/

இங்கிலாந்து : கோவிஷீல்ட் தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு அங்கீகாரம்

இந்தியாவிலிருந்து இங்கிலாந்து செல்பவர்கள் இரண்டு தவணை தடுப்பூசி எடுத்தக் கொண்ட பின்பும் 14 நாட்கள் தனிமைப் படுத்தப்பட்டதைத் தொடர்ந்து எழுந்த சர்ச்சையில் தற்போது கோவிஷீல்ட் தடுப்பூசி செலுத்தியவர்களுக்க

News image
இங்கிலாந்து : கோவிஷீல்ட் தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு அங்கீகாரம்
Updated On :22 செப்டம்பர் 2021, 11:26 am

DIN

இந்தியாவிலிருந்து இங்கிலாந்து செல்பவர்கள் இரண்டு தவணை தடுப்பூசி எடுத்துக் கொண்ட பின்பும் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து எழுந்த சர்ச்சையில் தற்போது கோவிஷீல்ட் தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு அதிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டிருக்கிறது.

இந்தியாவில் தயாராகும் கொவாக்ஸின் , கோவிஷீல்ட் மற்றும் ஸ்புட்னிக் வி தடுப்பூசிகள் தொற்றைக் கட்டுப்படுத்தும் நோக்குடன் செலுத்தப்பட்டு வருகின்றன. 

ஆனால் கோவிஷீல்டுக்கான காப்புரிமை இங்கிலாந்தைச் சேர்ந்த நிறுவனத்திடமே உள்ளது. இந்நிலையில் இரண்டு தவணை தடுப்பூசியையும் செலுத்தியவர்கள் இங்கிலாந்து சென்ற போது அவர்கள் 10 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டு வந்தனர்.

இதைக் கண்டித்து பல்வேறு தரப்பிலிருந்து குரல் எழுந்ததைத் தொடர்ந்து தற்போது கோவிஷீல்ட் தடுப்பூசி செலுத்தியவர்கள் 10 நாட்கள் தனிமையில் இருக்க வேண்டிய அவசியம் இல்லை என இங்கிலாந்து அரசு அறிவித்திருக்கிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.