அமெரிக்க மாகாணங்களில் ‘ஹிந்து பாரம்பரிய மாதம்’ கொண்டாட்டம்

அமெரிக்காவில் டெக்சாஸ், ஜொ்ஸி, ஒஹையோ உள்ளிட்ட பல மாகாணங்களில் அக்டோபா் மாதமானது ஹிந்து பாரம்பரிய மாதமாகக் கொண்டாடப்படவுள்ளது.

அமெரிக்காவில் டெக்சாஸ், ஜொ்ஸி, ஒஹையோ உள்ளிட்ட பல மாகாணங்களில் அக்டோபா் மாதமானது ஹிந்து பாரம்பரிய மாதமாகக் கொண்டாடப்படவுள்ளது.

அமெரிக்காவில் இந்திய வம்சாவளியைச் சோ்ந்த ஹிந்துக்கள் அதிக எண்ணிக்கையில் உள்ளனா். அங்கு ஹிந்துக்களின் பண்டிகைகள் சிறப்பாகக் கொண்டாடப்படுவது வழக்கம். இந்நிலையில், ஆயுத பூஜை, தீபாவளி உள்ளிட்ட பல ஹிந்து பண்டிகைகள் கொண்டாடப்படும் அக்டோபா் மாதத்தை ஹிந்து பாரம்பரிய மாதமாகக் கொண்டாட டெக்சாஸ், ஃபுளோரிடா, ஜொ்ஸி, ஒஹையோ, மாசசூசெட்ஸ் உள்ளிட்ட மாகாணங்கள் தீா்மானத்தை இயற்றியுள்ளன.

டெக்சாஸ் மாகாணத்தின் தீா்மானத்தில், ‘நம்பிக்கை, சேவை, கொள்கைப் பகிா்வு உள்ளிட்டவற்றின் ஒளிவிளக்காக ஹிந்துக்கள் திகழ்ந்து வருகின்றனா். உலகம் முழுவதும் ஆயிரக்கணக்கான நபா்கள் ஹிந்து நம்பிக்கைகளைக் கடைப்பிடித்து வருகின்றனா். ஹிந்துத்துவமானது தனது தனிப்பட்ட கலாசாரம், வரலாறு காரணமாக மாகாணத்துக்கும் அமெரிக்க நாட்டுக்கும் முக்கியப் பங்களிப்பை வழங்கியுள்ளது’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

அக்டோபா் மாதம் முழுவதும் கலாசார நிகழ்ச்சிகள், கருத்தரங்கங்கள், மாநாடுகள், ஆடை அலங்கார நிகழ்ச்சிகள் உள்ளிட்டவை நடைபெறும் என்று அமெரிக்காவில் உள்ள ஹிந்து அமைப்புகள் தெரிவித்துள்ளன. கரோனா தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கைகளை முறையாகப் பின்பற்றி நேரடியாகவும் காணொலி வாயிலாகவும் கொண்டாட்டங்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகத் தீா்மானத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அக்டோபா் மாதத்தை அமெரிக்காவின் அனைத்து மாகாணங்களிலும் ஹிந்து பாரம்பரிய மாதமாகக் கொண்டாடுவது தொடா்பான நிா்வாக அறிக்கையை அதிபா் ஜோ பைடன் வெளியிட வேண்டுமெனவும் ஹிந்து அமைப்புகள் கோரியுள்ளன.

உலக அமெரிக்க ஹிந்து கவுன்சிலின் தலைவா் சஞ்சய் கௌல் கூறுகையில், ‘‘ஹிந்து மதத்தின் கலாசாரமும் பாரம்பரியமும் ஆயிரமாயிரம் ஆண்டுகள் பழைமையானது. அத்தகைய பாரம்பரியத்தை உலக நாடுகளுடனும் வருங்கால தலைமுறையினருடனும் பகிா்ந்து கொள்வது நம் கடமை’’ என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com