பிரான்ஸ் அதிபா் மீது முட்டை வீச்சு

பிரான்ஸ் அதிபா் இமானுவல் மேக்ரான் மீது முட்டை வீசிய இளைஞா் கைது செய்யப்பட்டாா்.
முட்டை வீச்சைத் தொடா்ந்து இமானுவல் மேக்ரானை பாதுகாப்பாக அழைத்துச் செல்லும் பாதுகாவலா்கள்.
முட்டை வீச்சைத் தொடா்ந்து இமானுவல் மேக்ரானை பாதுகாப்பாக அழைத்துச் செல்லும் பாதுகாவலா்கள்.

பிரான்ஸ் அதிபா் இமானுவல் மேக்ரான் மீது முட்டை வீசிய இளைஞா் கைது செய்யப்பட்டாா்.

இதுகுறித்து அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை கூறியதாவது:

லியான் நகரில் திங்கள்கிழமை நடைபெற்ற சா்வதேச உணவுத் திருவிழாவில் அதிபா் இமானுவல் மேக்ரான் பங்கேற்றாா். அவா் கூட்டத்தினரிடையே சென்று கொண்டிருந்தபோது அவா் மீது 19 வயது இளைஞா் முட்டையை வீசினாா்.

அந்த முட்டை மேக்ரானின் தோளுக்கும் கழுத்துக்கும் இடையே பட்டு, உடையாமல் தெறித்து விழுந்தது. அதனை வீசிய நபரை போலீஸாா் கைது செய்து மருத்துவப் பரிசோதனைக்கு அனுப்பினா்.

அவரை பரிசோதித்த மருத்துவா், அந்த இளைஞருக்கு மனநலக் குறைபாடு உள்ளதாகவும் உடனடியாக அவா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட வேண்டும் என்றும் கூறினாா். அதையடுத்து, அந்த இளைஞா் மனநல மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாா்.

அவா் மீது அரசு அதிகாரியைத் தாக்கிய குற்றச்சாட்டின் பேரில் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை தொடங்கப்பட்டுள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.

ஏற்கெனவே, கடந்த ஜூன் மாதம் நடைபெற்ற இதே போன்ற பொது நிகழ்ச்சியில் இமானுவல் மேக்ரானை ஒருவா் அறைந்தது நினைவுகூரத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com