மத்திய அமெரிக்க நாடான ஈக்வடாரில் குயாக்வாலி நகரில் அமைந்துள்ள சிறைச்சாலையில் நேற்று(செப்-28)இரவு கைதிகளுக்குள் நடந்த மோதலில் 24 பேர் உயிரிழந்திருக்கிறார்கள்.
பல்வேறு கொடுமையான குற்ற வழக்குகளில் ஈடுபட்ட சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் குற்றவாளிகளுக்குள் மோதல் வெடிப்பது சமீப காலமாக அதிகரித்து வருகிறது.
இதையும் படிக்க | தில்லி உயர்நீதிமன்றத்தில் துப்பாக்கியால் சுட்டுக் காவலர் தற்கொலை
இந்நிலையில் ஈக்வடார் நாட்டின் முக்கிய சிறைகளில் ஒன்றான குயாக்வாலி சிறைச்சாலையில் ’லாஸ் வெகோஸ்’ மற்றும் ‘லாஸ் கேனரஸ்’ என்கிற இருதரப்பினர்களுக்குள் ஏற்பட்ட மோதலில் சம்பவ இடத்திலேயே 24 பேர் பலியானதோடு 48 பேர் படுகாயம் அடைந்திருக்கிறார்கள்.
இத்தாக்குதலில் கத்திகள் , துப்பாக்கிகள் மற்றும் வெடிபொருட்கள் பயன்படுத்தப்பட்டதால் அம்மாகாண காவல்துறை அதிர்ச்சி அடைந்தனர். இதனால் கிட்டதட்ட 5 மணி நேர போராட்டதிற்குப் பின்பே கலவரத்தை அடக்கியிருக்கிறார்கள்.
மோதல் குறித்து விசாரணை நடந்து வருகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மே நாள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து!

13,380 mAh பேட்டரி, 12ஜிபி ரேம்.. ஒன்பிளஸ் டேப்லெட் பேட் 4-ல் என்னென்ன எதிர்பார்க்கலாம்?

ரியான் பராக் சம்பளத்தில் 25% 'கட்'? ராஜஸ்தான் அணிக்குத் தொடரும் அபராதங்கள்!

கோட்டை சங்கமேஸ்வரர் கோயிலில் தேரோட்டம்!
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


