150க்கும் மேற்பட்ட இந்தியர்களைக் கடத்திய தலிபான்கள்?

ஆப்கானிஸ்தானைக் கட்டுப்பாட்டில் வைத்துள்ள தலிபான்கள் 150க்கும் மேற்பட்ட இந்தியர்களை கடத்தியுள்ளதாக அதிர்ச்சிகர தகவல் வெளியாகியுள்ளது.
150க்கும் மேற்பட்ட இந்தியர்களைக் கடத்திய தலிபான்கள்?
150க்கும் மேற்பட்ட இந்தியர்களைக் கடத்திய தலிபான்கள்?

ஆப்கானிஸ்தானைக் கட்டுப்பாட்டில் வைத்துள்ள தலிபான்கள் 150க்கும் மேற்பட்ட இந்தியர்களை கடத்தியுள்ளதாக அதிர்ச்சிகர தகவல் வெளியாகியுள்ளது.

ஆப்கானிஸ்தானில் ஆட்சியைக் கைப்பற்றியுள்ள தலிபான்கள் வெளிநாட்டினர் பலரையும் தங்களது கட்டுப்பாட்டில் வைத்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்து வருகின்றன.

ஆப்கானிஸ்தானில் சிக்கியுள்ள தங்களது நாட்டு மக்களை மீட்க பல்வேறு உலக நாடுகளும் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றன. இந்நிலையில் தலிபான்கள் 150க்கும் மேற்பட்ட இந்தியர்களை கடத்தி தங்களது கட்டுப்பாட்டில் வைத்துள்ளதாக அதிர்ச்சிகர தகவல் வெளியாகியுள்ளது.

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் உள்ள விமான நிலையம் சென்ற இந்தியர்கள் பலர் தலிபான்களால் கடத்தப்பட்டு சித்ரவதை செய்யப்படுவதாக ஆப்கன் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது பரபரப்பைக் கிளப்பியுள்ளது.  

தலிபான்களால் கடத்திவைக்கப்பட்டுள்ள இந்தியர்கள் குறித்த விவரங்கள் எதுவும் வெளியாகாத நிலையில் தலிபான்கள் இதற்கு மறுப்பு தெரிவித்துள்ளனர். 

இந்தியர்கள் எவரும் தங்களது கட்டுப்பாட்டில் இல்லை எனக் குறிப்பிட்டுள்ள தலிபான் செய்தித் தொடர்பாளர் ஆப்கானிஸ்தானில் உள்ள வெளிநாட்டினர் யாரும் அச்சம் கொள்ளத் தேவையில்லை எனத் தெரிவித்துள்ளார்.

முன்னதாக இந்திய விமானப்படை விமானத்தின் மூலம் 85 இந்தியர்கள் காபூலிலிருந்து  மீட்கப்பட்டு இந்தியா அழைத்து வரப்பட்டுக் கொண்டிருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com