கரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்களுக்கு அபராதம்: ஆஸ்திரியா அறிவிப்பு

ஆஸ்திரியாவில் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளாமல் தவிர்க்கும் மக்களுக்கு இந்திய மதிப்பில் ரூ.3 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும் என அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.

கரோனா தொற்று பரவலைக் கட்டுப்படுத்த உலக நாடுகள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. உருமாறிய ஒமைக்ரான் வகை கரோனா பரவலைக் கட்டுப்படுத்துவதன் ஒரு பகுதியாக தடுப்பூசி செலுத்துவது தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் ஆஸ்திரிய நாட்டில் கரோனா தடுப்பூசியை செலுத்திக் கொள்ளாமல் தவிர்ப்பவர்களுக்கு அபராதம் விதிக்கும் புதிய அறிவிப்பை அந்நாட்டு அரசு வெளியிட்டுள்ளது.

அதன்படி கரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்வது ஆஸ்திரியாவில் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. கரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளாமல் தவிர்ப்பவர்களுக்கு இந்திய மதிப்பில் ரூ.3 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேற்கு ஐரோப்பியாவில் குறைவான அளவு தடுப்பூசி செலுத்திக் கொண்ட நாடுகளின் பட்டியலில் ஆஸ்திரியா முன்னணியில் உள்ளது. அந்நாட்டில் 68 சதவிகிதத்தினர் மட்டுமே கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ள நிலையில் கர்ப்பிணிகள் மற்றும் உடல் சிக்கல் உள்ளவர்களுக்கு மட்டும் தடுப்பூசி செலுத்துவதில் இருந்து  மருத்துவக் காரணங்களுக்காக விலக்கு அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com