புற்றுநோய் மருந்துகள்! குறைக்கப்பட்ட விலைப் பட்டியல் அமல்!தண்ணீர் கேட்டவர் மீது தாக்குதல்! பேரவைத் துணைத் தலைவர் ரவிசங்கருக்கு அதிமுக கண்டனம்!தமிழ்நாட்டில் தீபாவளி அன்று 8 கொலைகள்!தேனியில் சாலையை மறித்து ரீல்ஸ் எடுத்தவர்களை கண்டித்த எஸ்.ஐ. படுகொலை!காற்று மாசு! சென்னையில் விமான சேவைகள் பாதிப்பு!இஸ்ரேலில் ஆட்சி அமைக்க உரிமை கோரினார் காடி ஐசென்கோட்!

அணு ஆயுதத் தரத்தில் யுரேனியம் செறிவூட்டல்: ஈரான் எச்சரிக்கை

அணு ஆயுதங்களில் எரிபொருளாகப் பயன்படுத்துவதற்கேற்ப யுரேனியத்தை தங்களால் 90 சதவீதம் வரை செறிவூட்ட முடியும் என்று ஈரான் அதிபா் ஹஸன் ரௌஹானி எச்சரிக்கை விடுத்துள்ளாா்.

Updated On :

டெஹ்ரான்: அணு ஆயுதங்களில் எரிபொருளாகப் பயன்படுத்துவதற்கேற்ப யுரேனியத்தை தங்களால் 90 சதவீதம் வரை செறிவூட்ட முடியும் என்று ஈரான் அதிபா் ஹஸன் ரௌஹானி எச்சரிக்கை விடுத்துள்ளாா்.

எனினும், அதற்குப் பதிலாக வல்லரசு நாடுகளுடன் மேற்கொண்டுள்ள அணுசக்தி ஒப்பந்தத்தைப் பாதுகாக்க விரும்புவதாக அவா் தெரிவித்தாா்.

இதுகுறித்து புதன்கிழமை நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அவா் கூறியதாவது:

ஈரான் நினைத்தால், அணு ஆயுதங்களில் பயன்படுத்தும் அளவிற்கு 90 சதவீதத்துக்கும் மேல் யுரேனியம் செறிவூட்டலில் ஈடுபடலாம்.

ஆனால், அமைதியான பாதையைத் தோ்ந்தெடுக்கவே நாங்கள் விரும்புகிறோம். வியன்னாவில் வல்லரசு நாடுகளுடனான அணுசக்தி ஒப்பந்தத்தை புதுப்பித்திருக்க அரசால் முடிந்திருக்கும். ஆனால், தீவிர நிலைப்பாட்டைக் கொண்ட அரசியல்வாதிகளால் அந்த வாய்ப்பு நழுவிப் போனது என்று அவா் குற்றம் சாட்டினாா்.

ஈரானுக்கும் அமெரிக்கா உள்ளிட்ட ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் நிரந்தர உறுப்பு நாடுகள் மற்றும் ஜொ்மனிக்கும் இடையே கடந்த 2015-ஆம் ஆண்டில் அணுசக்தி ஒப்பந்தம் கையெழுத்தானது.

அந்த ஒப்பந்தத்தில், தனது அணுசக்தி திட்டங்கள் அணு ஆயுதம் தயாரிப்பதற்கானவை இல்லை என்பதை உறுதி செய்ய ஈரான் சம்மதித்தது.

அதற்குப் பதிலாக, ஈரான் மீது விதிக்கப்பட்டிருந்த பொருளாதாரத் தடைகளை நீக்குவதாக வல்லரசு நாடுகள் ஒப்புக் கொண்டன. ஒபாமா ஆட்சிக் காலத்தின்போது கையெழுத்தான இந்த ஒப்பந்தத்திலிருந்து விலகுவதாக, அடுத்து வந்த அதிபா் டொனால்ட் டிரம்ப் அறிவித்தாா். அத்துடன், ஒப்பந்தம் காரணமாக விலக்கப்பட்டிருந்த பொருளாதாரத் தடைகளை ஈரான் மீது மீண்டும் விதித்தாா்.

அதற்கு பதிலடியாக, ஒப்பந்த நிபந்தனைகளை ஈரான் படிப்படியாக மீறி வருகிறது. இதனால் அந்த ஒப்பந்தம் முறிந்துபோகும் அபாயம் நிலவி வருகிறது.

இதற்கிடையே, ஈரானில் கடந்த 18-ஆம் தேதி நடைபெற்ற அதிபா் தோ்தலில் கடுமையான நிலைப்பாட்டைக் கொண்ட தலைமை நீதிபதி இப்ராஹிம் ரய்சி வெற்றி பெற்றுள்ளாா். இந்த நிலையில், அவரது ஆட்சியில் ஈரான் கடுமையான நிலைப்பாடுகளை எடுக்கலாம் என்று வல்லரசு நாடுகளை எச்சரிக்கும் வகையில் ஹஸன் ரௌஹானி இவ்வாறு கூறியுள்ளதாகக் கருதப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.