புற்றுநோய் மருந்துகள்! குறைக்கப்பட்ட விலைப் பட்டியல் அமல்!
குறைக்கப்பட்ட புற்றுநோய் மருந்துகளின் புதிய விலை அமலுக்கு வந்தது பற்றி...

கோப்புப் படம்
543 புற்றுநோய் மருந்துகளின் திருத்தப்பட்ட புதிய விலைப் பட்டியல் இன்று முதல் அமலுக்கு வந்துள்ளன.
நாட்டில் புற்றுநோய் மருந்துகளின் விலையை 30% லாப வரம்புக்குள் மட்டுமே விற்பனை செய்ய வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
இதனைத் தொடர்ந்து, பல்வேறு வணிகப் பெயா்களில் (பிராண்ட்) விற்பனை செய்யப்படும் 543 புற்றுநோய் மருந்துகளின் திருத்தப்பட்ட அதிகபட்ச சில்லறை விற்பனை விலை (எம்ஆா்பி) பட்டியலை, தேசிய மருந்து விலை நிா்ணயம் கடந்த வாரம் வெளியிட்டது.
இதில், நோயாளிகள் அதிகளவில் பயன்படுத்தக் கூடிய, மார்பக புற்றுநோய்க்கான பால்போசிக்லிப் (Palbociclib) மருந்தின் விலை ரூ. 40,421-லிருந்து ரூ. 2,720 ஆகவும், தியோடெபா (Thiotepa) என்ற கீமோதெரபி ஊசியின் விலை ரூ. 80,072-லிருந்து ரூ. 7,150 ஆகவும் பல மடங்கு குறைக்கப்பட்டுள்ளது.
மருந்துகள் விலை
ரத்தப் புற்றுநோய்க்கான டசாடினிப் (Dasatinib) - பழைய விலை ரூ. 17,811; புதிய விலை ரூ. ரூ.1,808.
தியோடெபா (Thiotepa) என்ற கீமோதெரபி ஊசி - பழைய விலை ரூ. 80,072; புதிய விலை ரூ. 7,150
பெர்டுசுமாப் (Pertuzumab) என்ற புற்றுநோய் ஊசி - பழைய விலை ரூ. 94,951; புதிய விலை ரூ. 30,593
அனஸ்ட்ரோசோல் (Anastrozole) - பழைய விலை ரூ. 695; புதிய விலை ரூ. 73
அசாசிடிடின் (Azacitidine) - பழைய விலை ரூ. 6,337; புதிய விலை ரூ. 1,495.04
பெவாசிரிசுமாப் (Bevacizumab) - பழைய விலை ரூ. 21,767.70; புதிய விலை ரூ. 5,930.13
டசாடினிப் (Dasatinib) - பழைய விலை ரூ. 2,812.50; புதிய விலை ரூ. 1,085.93
டெனோசுமாப் (Denosumab) - பழைய விலை ரூ. 22,031.25; புதிய விலை ரூ. 5,941
என்சாலுடாமைட் (Enzalutamide) - பழைய விலை ரூ. 6,578.20; புதிய விலை ரூ. 2,232
எர்லோட்டினிப் (Erlotinib) - பழைய விலை ரூ. 4,637.45; புதிய விலை ரூ. 2,008
ஃபுளுடராபின் (Fludarabine) - பழைய விலை ரூ. 14,235; புதிய விலை ரூ. 2,432
ஃபுல்வெஸ்ட்ரான்ட் (Fulvestrant) - பழைய விலை ரூ. 26,072.16; புதிய விலை ரூ. 5,491
இந்த நிலையில், நாடு முழுவதும் திருத்தப்பட்ட புதிய விலை இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது.
இந்த விலை குறைப்பு மூலம் ஆண்டுக்கு ரூ. 3,540 கோடி நோயாளிகளின் செலவீனம் குறையும் என்று தேசிய மருந்து விலை நிா்ணயம் ஆணையம் தெரிவித்துள்ளது.
மேலும், புற்றுநோய் மருந்துகளை வாங்குவதற்கு முன்னதாக, பார்மா சாஹி தாம் (Pharma Sahi Daam) செயலி மூலமாகவோ, அல்லது nppa.gov.in இணையதளம் மூலமாகவோ சரிபார்த்துக் கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஒருவேளை செயலியில் குறிப்பிட்ட தொகையைவிட அதிக விலைக்கு மருந்துகளை விற்பனை செய்தால், 1800-111-255 என்ற எண்ணிலோ அல்லது செயலி மூலமோ புகார் அளிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் மற்றும் காப்புரிமை பெற்ற மருந்துகளின் (Keytruda, Imjudo, Opdivo) விலையில் எந்த மாற்றமும் இல்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Summary
Cancer drugs! Reduced price list now in effect!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.


